மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு

மாநாடு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு
x
மாநாடு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நாளை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்