இசையால் இதயங்களை ஈர்த்த இளையராஜா!!

இசையால், இதயங்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் 78 வது பிறந்த நாள் இன்று...
இசையால் இதயங்களை ஈர்த்த இளையராஜா!!
x
இசையால், இதயங்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் 78 வது பிறந்த நாள் இன்று...

நம் சந்தோஷங்கள், கவலைகள், துயரங்கள் என அனைத்திலும் நம்முடன் துணையாய் இருப்பது இசை... கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இசை இளையராஜாவினுடையது. 1943 ஆம் ஆண்டு ஜுன் 2 ஆம் தேதி பண்ணைபுரத்தில் பிறந்த ராசையா, 1976 - ல் அன்னக்கிளி படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் இளையராஜாவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தார் இளையராஜா. கிராமிய பாடல்களின் மாறாத மண்வாசனையை தன் இசையெங்கும் பதியமிட்டவர், மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் இழையவிட்டு தன் பாடல்களின் மூலம் பலப் புதுமைகளை நிகழ்த்திக் காட்டினார் இளையராஜா...

மிகக்குறுகிய காலத்திலேயே இளையராஜா இசையமைத்தால் படம் ஹிட் என்ற நிலை உருவானது. குழந்தைக்கான தாலாட்டு, காதலின் பரிதவிப்பு, வெற்றிக் கொண்டாட்டங்கள், மன முறிவுகள்,அழுகைகள், தேற்றுதல் என அனைத்திற்கும் இளையராஜாவின் இசை பொருந்திப் போக அவர் இசை ஞானியானார். 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா. இவர் இசையமைத்த படங்களின் பிண்ணனி இசையும் பிரமிப்பின் உச்சம் தான்...
காமெடிக்கு கூட பிண்ணனியில் வலு சேர்த்தது இவரின் இசை. இன்றும் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கு  இவர் அமைத்த  பிண்ணனி இசை சிரிப்பை வரவழைக்க கூடியது. இசையில் புதிய உச்சங்களை தொட்டவர் இது வரை 6 தேசிய விருதுகள், பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட மிக உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக கணினி மூலம், விக்ரம் படத்திற்கு இசையமைத்தார். ஆசியாவிலேயே சிம்பொனியில் இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா தான். 1980 களுக்கு பின் இளையராஜாவின் வரவு தமிழ்த் திரைப்பட இசைவுலகில் புது சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது. தமிழ் திரையிசையை புதிய தளத்திற்கு கொண்டு சென்றதில் பெரும் பங்கு இவருடையது. 

Next Story

மேலும் செய்திகள்