தனுஷ் ஒரு மந்திரவாதி; கர்ணனை பார்த்த பாலிவுட் இயக்குனர் புகழாரம்

நடிகர் தனுஷ், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
தனுஷ் ஒரு மந்திரவாதி; கர்ணனை பார்த்த பாலிவுட் இயக்குனர் புகழாரம்
x
நடிகர் தனுஷ், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். மேலும்,"அத்ரங்கி ரே" என்ற திரைப்படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், கர்ணன் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் ஆனந்த் எல்.ராய் தனுஷையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், அற்புதம்.. புத்திசாலித்தனம் என்று தான் கர்ணன் படத்தின் அனுபவத்தை விவரிக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும், தனுஷை ஒரு நடிகர் என்றுதான் நினைத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஒரு மந்திரவாதி என்றும் ஆனந்த் எல்.ராய் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்