இந்தியன் 2 படம் தாமதத்திற்கு லைக்காவே காரணம்; நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் பதில் மனு

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா தான் காரணம் இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
x
நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா தான் காரணம் இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனமான லைகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட் செலவை 270 கோடி ரூபாயில் இருந்து 250கோடி ரூபாயாக குறைத்த பிறகும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை லைகா  ஏற்படுத்தியதாக அவர்  புகார் தெரிவித்துள்ளார். அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் தனது பதில் மனுவில் ஷங்கர் கூறியுள்ளார். கமலுக்கு ஏற்பட்ட மேக்கப்  அலர்ஜி, கிரேன் விழுந்து விபத்து, ஊரடங்கு போன்ற காரணங்களும் படபிடிப்பு தாமதத்திற்கு காரணம் என ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்று ஷங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்,. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்