நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் - கொரோனாவுக்கு பலியான அடுத்த பிரபலம்

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தார். அவரை பற்றி பலரும் அறியாத சில தகவல்களை தற்போது காணலாம்....
நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் - கொரோனாவுக்கு பலியான அடுத்த பிரபலம்
x
நகைச்சுவை நடிகர் விவேக் உயிரிழந்த நினைவுகள் இன்னும் நீங்காத நேரத்தில்,  நகைச்சுவை நடிகர் பாண்டு, கொரோனாவுக்கு இரை ஆகியுள்ளார். இதோ இந்த காணொளி விவேக் மரணமடைந்த போது, நகைச்சுவை நடிகர் பாண்டு நம் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டி....
 இவர் இன்று உயிருடன் இல்லை....என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கூறிய பாண்டு, கைமாறு செய்வதற்காக விவேக் சென்ற இடத்திற்கே சென்று விட்டாரோ...1947ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிறந்தவர் பாண்டு....இவர் சிறந்த ஓவிய கலைஞர் என்பது பலரும் அறியாத தகவல். சென்னை ஓவியக்கல்லூரியில் தேர்ச்சி பெற்றவர். இவரது ஓவியம் தான் தற்போது அதிமுகவின் கொடியாக உள்ளது என்பது பலரும் அறியாத ஒன்று....ஆம்....திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர், அதிமுகவை தோற்றுவித்த போது, பாண்டு தான் அதிமுக கொடியை வரைந்து கொடுத்தார். அது பிடித்துப் போனதால் அதையே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியாக அறிவித்தார், எம்ஜிஆர்....இது தவிர சென்னை நந்தனம் பெரியார் பில்டிங்கின் மேலே உள்ள பிரமாண்டமான உலோக எழுத்துகள்,  உள்பட பல்வேறு வளாகங்களில் உள்ள பிரம்மாண்ட எழுத்துக்களும் பாண்டுவின் கைவண்ணமே...நடிகர் பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு என மூன்று மகன்கள் உள்ளனர். அவரது மனைவி
குமுதாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது...மக்களை மகிழ்வித்த கலைஞர்கள் இவ்உலகை விட்டு மறைந்தாலும், என்றும் மக்கள் மனங்களில் நீங்கா நினைவுகளுடன்  நிலைத்திருப்பார்கள் என்பதே நிதர்சனம்....



Next Story

மேலும் செய்திகள்