இந்தியன்-2 பட விவகாரம் - ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி
பதிவு : ஏப்ரல் 28, 2021, 03:30 PM
இந்தியன்-2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி அடைந்தது.
இந்தியன்-2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி அடைந்தது. 

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது,  இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று, 
இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், 

ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்காததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5337 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

775 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

278 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

32 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

26 views

பிற செய்திகள்

மே 2 வாக்கு எண்ணிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

73 views

ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருப்பு; விற்பனை நேரம், மையங்களை அதிகரிக்கவும் - கமல்ஹாசன் கோரிக்கை

ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் அதன் விற்பனை நேரத்தை, அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

34 views

"மே1 முதல் ஆசிரியர்கள் வரத் தேவையில்லை; வீட்டிலிருந்தே மாணவர்களை தயார்படுத்தலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

51 views

டோக்கன் விநியோகத்தில் சர்ச்சை - பாஜக பிரமுகர் வீடு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் வீடு முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், பா.ஜ.க. வேட்பாளர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

155 views

பெல் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

திருச்சி பெல் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

93 views

"ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட போவதில்லை" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்கப்பட உள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.