காருக்குறிச்சி அருணாச்சலம் நூற்றாண்டு விழா.... நாதஸ்வர இசையால் மக்களை கவர்ந்த நாயக
பதிவு : ஏப்ரல் 26, 2021, 12:41 PM
பாமர மக்களையும் நாதஸ்வர இசை மீது நாட்டம் கொள்ள வைத்த காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அவரது இசை பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பாமர மக்களையும் நாதஸ்வர இசை மீது நாட்டம் கொள்ள வைத்த காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அவரது இசை பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி ஜானகி பாட, அதில் வரும் நாதசுர இசை, இன்றும் மக்களை மயக்கும் மகுடியாய் இருந்து வருகிறது.மக்களிடையே, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த நாதஸ்வர இசைக்கு சொந்தக்காரர், புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம்....

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள காருகுறிச்சியில் 1921ம் ஆண்டு பிறந்த அருணாச்சலம்,12 வயசுலயே நாதஸ்வரத்தில் அபரிமிதமான ஆற்றல் கொண்டிருந்தார்.
நாதஸ்வர மாமேதை டிஎன் ராஜரத்தினத்தின் மாணவராக சிறந்து விளங்கிய அவர், 
1962 ம் ஆண்டு வெளியான கொஞ்சும் சலங்கை எனும் திரைப்படத்தில் வரும் சிங்காரவேலனே தேவா என்ற பாடல் மூலம் தனது நாதசுர இசையால் பாமர மக்களையும் ஈர்த்து அதனை ரசிக்க வைத்தவர். 

நேரு, இந்திரா காந்தி, காமராஜர் ஆகியோர் முன்னிலையில் நாதசுரம் இசைத்து வரவேற்பு பெற்ற காருக்குறிச்சி அருணாசலத்தின் இசை நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையையும் அலங்கரிக்க தவறவில்லை.

சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் என் எஸ் கிருஷ்ணன் சாவித்திரி போன்ற பிரபலமான நடிகர் நடிகைகளும் நெருக்கமாக இருந்த காருக்குறிச்சி அருணாசலத்தின், நாதஸ்வரக் கச்சேரியை  வானொலி நிலையத்தினர், வழக்கத்துக்கு மாறாக, நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பியது வரலாறு.

இப்படி தனது இசையால், புகழின் உச்சிக்கு சென்ற அருணாச்சலம், 1964-ம் ஆண்டு கோவில்பட்டியில் உயிரிழந்தார். அதன் பின், ஜெமினிகணேசனும் நடிகை சாவித்திரியும் இணைந்து, தனது சொந்த செலவில்  கோவில்பட்டியில் அருணாச்சலத்திற்கு
சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை கட்டி திறந்தனர்.

இசை மூலம் பெருமை சேர்த்த காருகுறிச்சி அருணாச்சலத்தின் சிலை அவரது சொந்த ஊரான காருகுறிச்சியில் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில், அதனை புனரமைப்பு செய்வதோடு நூற்றாண்டின் நினைவாக, தமிழக அரசு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6366 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

988 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

320 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

153 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

29 views

பிற செய்திகள்

இன்று அன்னையர் தினம்... நம்முயிர் காக்க தன்னுயிர் பேணாதவள்

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தன்னலமற்ற தாய்மார்களை பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைக் காணலாம்...

24 views

ஒரே நாளில் ரூ.426 கோடி மது விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடைபெற்று இருக்கிறது.

82 views

தன் தாய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின்...

முதல்வர் அன்னையர் தின வாழ்த்து... தன் தாய்க்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

158 views

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : மனுவின் நிலையை மக்கள் அறிய இணையதளம் தொடங்கப்படும் - ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

55 views

ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

52 views

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு...

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.