93- வது ஆஸ்கர் விருது விழா : சிறந்த திரைக்கதை - Promising Young Woman"

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
93- வது ஆஸ்கர் விருது விழா : சிறந்த திரைக்கதை - Promising Young Woman
x
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திரைப்பட துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள், வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக, 2 மாதங்கள் தாமதமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதிற்காக The Father, Judas and the Black Messiah, Mank, Minari, Nomadland, Promising Young Woman, Sound of Metal, The Trial of the Chicago 7 ஆகிய படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன. இதில் Promising Young Woman படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், The Father படத்திற்கு நாவல்களை தழுவி அமைக்கப்பட்ட சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது விழாவை நேரலையில் இணையதளம் வழியாக பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...

Next Story

மேலும் செய்திகள்