'சின்னதம்பி' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு - படத்தை நினைவு கூர்ந்த நடிகை குஷ்பு
பதிவு : ஏப்ரல் 13, 2021, 12:09 PM
சின்னதம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை அந்த படத்தின் நடிகையான குஷ்பு நினைவு கூர்ந்துள்ளார்.
சின்னதம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை அந்த படத்தின் நடிகையான குஷ்பு நினைவு கூர்ந்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, நடிகை குஷ்பு நடிப்பில் 1991-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி சின்னதம்பி படம் வெளியானது. வசூலில் பெரும் சாதனை படைத்த இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகை குஷ்பு ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் தான் கடன்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 


கொரோனா கட்டுப்பாடுகளுடன் வந்த படங்கள் - முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்கள்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெளியான படங்களின் முதல் வார இறுதி நாட்கள் வசூலில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த படம் வெளியான முதல் வாரத்தின் இறுதிநாட்களில் 90 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் 79 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் - வருகிற 23ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ்

சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் வருகிற 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப்புகழ் பொன்ராம் இயக்கியுள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில், சத்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தன்று "ஜில்லா அசந்து நிக்கும்"  என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்படும் எனவும் படக்குழு கூறியுள்ளது.

நடிகர் ஃபகத் பாசில் படங்களுக்கு தடையா?

பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் படங்களை திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களுக்கு படங்களை கொடுப்பதால் ஃபகத் பாசிலின் படங்களை திரையரங்குகளில் வெளியிட அந்த மாநில திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தடை விதித்தாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எந்த தடையும் விதிக்கவில்லை என திரையரங்கு உரிமையாளர்களள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஃபகத் பாசிலிடம் பேசி தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மண்டேலா படத்தை பாராட்டிய ஐபிஎல் வீரர்

நடிகர் யோகி பாபுவின் மண்டேலா படத்தை ஐபிஎல் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமிக்கு மண்டேலா படம் மிகவும் பிடித்துபோனதையடுத்து இது குறித்து சக வீரரான நடராஜனிடம் தெரிவித்துள்ளார். அப்போது யோகி பாபு தனது நண்பர்தான் என்று கூறி யோகி பாபுவுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை நடராஜன் பேச வைத்துள்ளார்.  மண்டேலா படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6526 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1144 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

232 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

89 views

பிற செய்திகள்

நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

76 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - திரையுலகினர் நிதியுதவி | COVID19

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

24 views

சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் உதவி - பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தகவல்

சினிமா கலைஞர்களுக்காக நடிகர் அஜித் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

110 views

துணை நடிகர் கில்லி மாறன் கொரோனாவால் உயிரிழப்பு; திரையுலகினர் இரங்கல்

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் கில்லி மாறனுக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

652 views

இந்தியன் 2 படம் தாமதத்திற்கு லைக்காவே காரணம்; நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் பதில் மனு

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா தான் காரணம் இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

84 views

அமேசான் பிரைமில் கர்ணன்..! வரும் 14 ஆம் தேதி வெளியீடு

கர்ணன் திரைப்படம் மே 14ஆம் தேதியன்று ஓடிடியில் வெளியாக உள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.