அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் "தி கிரே மேன்" என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புகாக அமெரிக்காவில் தங்கியுள்ள தனுஷ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரையரங்கில் கர்ணன் திரைப்படத்தை பார்த்துள்ளார். இதையடுத்து, படத்தின் இயக்குனார் மாரி செல்வராஜை வீடியோ காலில் தொடர்பு கொண்டு தனுஷ் பேசியுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ்க்கு நன்றி கூறியுள்ளார்.
Next Story