மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த்

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார், நடிகர் ரஜினிகாந்த்.
x
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார், நடிகர் ரஜினிகாந்த். கடந்த டிசம்பர் மாதம், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கவுள்ளது. 3 வாரங்கள் நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள, இன்று காலை ரஜினிகாந்த் தனி விமானத்தில் சென்றுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்