கொரோனா பிடியில் நடிகர் - நடிகைகள்

நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது திரைத்துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.
கொரோனா பிடியில் நடிகர் - நடிகைகள்
x
நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது திரைத்துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் செப்டம்பரில் சினிமா படப்பிடிப்புகள் படிப்படியாக தொடங்கியது.
 
கடந்த டிசம்பர் மாதம், ஐதராபாத்தில், ரஜினியின் அண்ணாத்த படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. 
 
பிப்ரவரி மாதம், நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர் அவர் குணமாகி வீடு திரும்பினார். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. 

கொரோனாவில் பிடியில் இருந்து சினிமா பிரபலங்களும் தப்ப முடியவில்லை. படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்ளும் நடிகர், நடிகைகளும் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. 

இதில் இந்தி திரையுலகம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்க்கொண்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் மும்பையில் வசிக்கும் இந்தி பட உலகினர் கொரோனா தொற்றில் எளிதில் சிக்குகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடைய இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் நடித்த நடிகை ஆலியா பட்டிற்கும் தொற்று உறுதியானது. 

இந்தி முன்னணி நடிகர் அமீர்கான், சூர்யாவின் சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்த பவேஷ் ராவல், இந்தி பாடகரும் இசையமைப்பாளருமான பப்பி லஹரி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதுபோக ரன்பீர் கபூர், மிலிந்த் சோமன், மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையை தொடர்ந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் ராம் சேது படப்படிப்பில் கலந்துக்கொண்ட படக்குழுவினர் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை  பூமி பெட்நேகர், நடிகர் கோவிந்தாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரிகிஷன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ளும் திரை பிரபலங்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்படுவது திரைத்துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்