ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?
பதிவு : பிப்ரவரி 26, 2021, 03:56 PM
ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
ஆரம்ப காலத்தில் பெரிதும் மக்களால் கண்டுகொள்ளப்படாத ஓடிடி தளங்கள், கொரோனா ஊரடங்கின் போது அசுர வளர்ச்சி அடைந்தன. திரையரங்குகள் மூடப்பட்டதுடன், பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தபோது, அப்படி என்ன தான் இருக்கிறது? என ஓடிடி பக்கம் சென்றவர்கள், தற்போது அதில் தத்தளிக்கின்றனர். ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும், ஓடிடி தளங்கள் ஈசல் போல் கிளம்ப, போட்டிகள் நிரம்பி, வாடிக்கையாளர்களை ஈர்க்க ஓடிடி தளங்கள், பல அப்டேட்களையும் வழங்க தொடங்கின. அதன் வளர்ச்சியாகவே ஓடிடி தளங்கள் தற்போது கட்டுபாடின்றி, கண்டதை ஒளிபரப்பி வருகின்றன.

நாளடைவில் முகம் சுழிக்கும் அளவிற்கு, ஆபாசம், வன்முறை என கட்டுபாடுகள் இன்றி அனைத்தும் ஓடிடியில் களம் காண, ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்களில் சர்ச்சை நிறைந்த பல கருத்துகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், தணிக்கையின்றி சுதந்திரமாக வெளியாவதால், சமூகத்தில் பிளவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்தாக புகார்களும் குவிந்தன. சமீபத்தில் கூட  ஹாட் மல்டி , சிக்கூ,  ப்ளிஸ்மூவிஸ்  உள்ளிட்ட தளங்கள் மீது பெண்களை அநாகரிகமாக சித்தரித்து மற்றும் ஆபாச காட்சிகளை வெளியிட்டதாக மஹாராஷ்டிரா சைபர் கிரமை் போலீசார்  வழக்கு பதிந்தனர்.

அதை தொடர்ந்து தமிழில் கூட 'காட்மேன்' என்ற இணையத் தொடர் குறித்து ஏராளமான  குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்த நிலையில், அத்தொடரின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்தது. தொடரை வெளியிடப்போவதில்லை என்று ஓடிடி நிறுவனம் அதிரடியாக தெரிவித்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள், உச்ச நீதிமன்றம் சென்று வந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இந்த ஓ.டி.டி. தளங்களே காரணம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில், இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம், ஓடிடி இயங்கு தளங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள் ஆகியவை, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது

அதன்படி, திரைப்படங்களுக்கு U, A , U/A என்று தணிக்கை சான்று வழங்குவது போல, ஓ.டி.டி தளங்களும் தங்கள் நிகழ்ச்சிகள் குறித்த சுய சான்று வழங்க வேண்டும் என்றும், ஓடிடியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு 13+, 16+, Adult என வகைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4440 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

371 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

227 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசம் : உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் 81 வயதான மூதாட்டி ராணி தேவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில், 81 வயது நிரம்பிய மூதாட்டி ராணி தேவி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

17 views

மம்தா கட்சி தலைவர் வீட்டில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி தலைவர் வீட்டில் 4 மின்னணு வாக்கு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

207 views

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

20 views

உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல்

இந்தியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

7 views

"கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனாவின் 2வது அலை மோசமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

794 views

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஊரடங்கு

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

307 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.