சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்
பதிவு : பிப்ரவரி 19, 2021, 01:42 PM
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் வழக்கமான காலை நேரம், சற்று  பரபரப்பாக காணப்பட்டது. மகிழ்ச்சி குரல்கள், செல்போன் கேமராக்களின் செல்பிக்கள் என பரபரப்புக்கு காரணம் நடிகர் அஜித் குமார் தான். தலையில், தொப்பி முகக்கவசம், கால்சட்டை டீசர்ட் சகிதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கால் டாக்சியில் எளிமையாக வந்து இறங்கிய அந்த நபரை, நடிகர் அஜித்குமார் என யாரும் முதலில் நம்பியிருக்க மாட்டார்கள்.  அவரை காவல்பணியில் இருந்த போலீசார் என்ன விவரம் என விசாரித்தனர். அப்போதுதான் தனது முகக்கவசம், தொப்பியை அகற்றினார். அட தல அஜித்தா இது என காவலர்களிடம் கிசுகிசுப்பாக எழுந்த குரல் காவல் ஆணையர் அலுவலகம் முழுவதும் பரவியது.

போலீசார்,  பொதுமக்கள் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு அஜித்துடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அஜித்தின் இந்த அதிரடி விசிட் இணையத்தில் வைரலான அதே நேரத்தில், அஜித் வருகைக்கான காரணம் என்னவென்பதும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்களின் அன்புத் தொல்லையால், சற்று கடுமையான தொனியிலேயே அறிக்கை வெளியிட்டிருந்த அஜித், ரசிகர்கள் பொறுமையுடனிருக்க அன்புக்கட்டளை போட்டிருந்தார். ஆனாலும் போகுமிடமெல்லாம் அப்டேட் கேட்டு பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை வம்பிழுத்து வைத்திருந்த அஜித் ரசிகர்கள், ஒருவேளை நம்மீதே புகார் கொடுக்க சென்று விட்டாரோ "தல" என வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கினர்.  பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித் வருகைக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பில் அஜித் உறுப்பினராக உள்ளார். இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.   இங்கு செல்வதற்காக கால்டாக்சி புக் செய்துள்ளார் அஜித். கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்காக புதிய அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். இது தான் அத்தனை குழப்பத்திற்கும் காரணம். விவரத்தை கேட்டுத் தெரிந்து கொண்ட போலீசார்,  சரியான முகவரியை கொடுத்து அஜித்குமாரை அதே வாகனத்தில் அனுப்பி வைத்தனர். தவறுதலாக வந்திருந்தாலும் புதிய கெட்டப்பில் அஜித்தின் தோற்றத்தை பார்த்ததோடு, தல-யின் எளிமையை பார்த்தீர்களா என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4452 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

372 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

227 views

பிற செய்திகள்

"ஹாரிபாட்டர்" நடிகர் பவுல் ரிட்டர் காலமானார்

புகழ் பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் பவுல் ரிட்டர் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்தார்.

236 views

கொரோனா பிடியில் நடிகர், நடிகைகள் - கலக்கத்தில் திரைத்துறையினர்

நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது திரைத்துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.

461 views

மனைவி உடன் வந்து வாக்களித்த நடிகர் மம்முட்டி

கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில் நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது மனைவி சல்பத் இருவரும் எர்ணாகுளத்திலுள்ள பெண்கள் பள்ளியில் வாக்களித்தனர்.

24 views

மக்களோடு மக்களாக திரை நட்சத்திரங்கள்... ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்...

மக்களோடு மக்களாக திரை நட்சத்திரங்கள்... ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்...

44 views

(06.04.2021) சினிமா நட்சத்திர பிரபலங்கள் வாக்களித்த ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

(06.04.2021) சினிமா நட்சத்திர பிரபலங்கள் வாக்களித்த ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

283 views

கொரோனா பிடியில் நடிகர் - நடிகைகள்

நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது திரைத்துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.