சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்
பதிவு : பிப்ரவரி 19, 2021, 01:42 PM
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் வழக்கமான காலை நேரம், சற்று  பரபரப்பாக காணப்பட்டது. மகிழ்ச்சி குரல்கள், செல்போன் கேமராக்களின் செல்பிக்கள் என பரபரப்புக்கு காரணம் நடிகர் அஜித் குமார் தான். தலையில், தொப்பி முகக்கவசம், கால்சட்டை டீசர்ட் சகிதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கால் டாக்சியில் எளிமையாக வந்து இறங்கிய அந்த நபரை, நடிகர் அஜித்குமார் என யாரும் முதலில் நம்பியிருக்க மாட்டார்கள்.  அவரை காவல்பணியில் இருந்த போலீசார் என்ன விவரம் என விசாரித்தனர். அப்போதுதான் தனது முகக்கவசம், தொப்பியை அகற்றினார். அட தல அஜித்தா இது என காவலர்களிடம் கிசுகிசுப்பாக எழுந்த குரல் காவல் ஆணையர் அலுவலகம் முழுவதும் பரவியது.

போலீசார்,  பொதுமக்கள் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு அஜித்துடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அஜித்தின் இந்த அதிரடி விசிட் இணையத்தில் வைரலான அதே நேரத்தில், அஜித் வருகைக்கான காரணம் என்னவென்பதும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்களின் அன்புத் தொல்லையால், சற்று கடுமையான தொனியிலேயே அறிக்கை வெளியிட்டிருந்த அஜித், ரசிகர்கள் பொறுமையுடனிருக்க அன்புக்கட்டளை போட்டிருந்தார். ஆனாலும் போகுமிடமெல்லாம் அப்டேட் கேட்டு பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை வம்பிழுத்து வைத்திருந்த அஜித் ரசிகர்கள், ஒருவேளை நம்மீதே புகார் கொடுக்க சென்று விட்டாரோ "தல" என வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கினர்.  பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித் வருகைக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பில் அஜித் உறுப்பினராக உள்ளார். இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.   இங்கு செல்வதற்காக கால்டாக்சி புக் செய்துள்ளார் அஜித். கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்காக புதிய அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். இது தான் அத்தனை குழப்பத்திற்கும் காரணம். விவரத்தை கேட்டுத் தெரிந்து கொண்ட போலீசார்,  சரியான முகவரியை கொடுத்து அஜித்குமாரை அதே வாகனத்தில் அனுப்பி வைத்தனர். தவறுதலாக வந்திருந்தாலும் புதிய கெட்டப்பில் அஜித்தின் தோற்றத்தை பார்த்ததோடு, தல-யின் எளிமையை பார்த்தீர்களா என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

362 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

129 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

61 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

34 views

பிற செய்திகள்

அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்- மைதானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

மைதானத்தில் ரசிகர்கள் தன்னிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதாக இந்திய கிரக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

69 views

நடிகர் விஷாலின் 'சக்ரா' படத்திற்கு தடை

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

32 views

'வலிமை' - விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு

நடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.

322 views

"வலிமை" அப்டேட் - அஜித் பரபரப்பு அறிக்கை

வலிமை படத்தின் அப்டேட் என்னவென்று, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க..., நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

92 views

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் - கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12 views

அர்ஜூன் தாஸை இயக்கும் வசந்த பாலன்.....ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் புதிய படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.