ஓடிடியிலா? திரையரங்கிலா? - ஜகமே தந்திரம் படக்குழுவிற்குள் பனிப்போர்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 11:53 AM
ஜகமே தந்திரம் படக்குழுவில் தனுஷ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது...
ஜகமே தந்திரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ச‌சிகாந்த், படத்தின் நடிகர் தனுஷை டுவிட்டரில் அன்பாலோவ் செய்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இருந்த பனிப்போர் உறுதி செய்யப்பட்டுள்ளது... அப்படி என்ன தான் பிரச்சினை அவர்களுக்குள்....

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'ஜகமே தந்திரம்'  திரைப்படத்தை, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். தனுஷ், ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயண‌ன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதமே திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் கொரோனா ஊரடங்கு ரிலீஸ் தேதியை தள்ளிபோட்டது.... 

அன்று முதல் கிட்டத்தட்ட ஓராண்டாகவே இதோ ரிலீஸ் அதோ ரிலீஸ் என தள்ளிபோய்க்கொண்டே இருந்த‌து ஜகமே தந்திரம் திரைப்படம். இறுதியாக பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், ரிலீஸ் ஆகாத கடுப்பில், ஜெகமே தந்திரம், ஷேம் ஆன் யூ ஒய் நாட் ஆகிய ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர். இந்த நிலையில், தனுஷ் ரசிகர்களுக்கு மற்றொரு பேரதிர்ச்சியாக, நெட்பிளிக்ஸ் என்னும் ஓடிடி தளத்திற்கு படத்தை விற்றுவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்ற விருப்பத்துடன் இத்தனை மாதங்களாக காத்திருந்த தனுஷ், இதற்காகவே மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவது என்று படக்குழு முடிவு செய்த போது தன் ஆதரவை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என நான் விருப்ப‌ப்படுகிறேன் என பகிரங்கமாகவே தன் எதிர்ப்பை டுவிட்டரில் பதிவிட்டார். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் விருப்பமும் அது தான் எனவும் தனுஷ் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனுஷை அன்பாலோவ் செய்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர் ச‌சிகாந்த்.. இதன் காரணமாகவே அரசல்புரசலாக பேசப்பட்டு வந்த இவர்களது பிரச்சினை  வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரகிட ரகிட பாடலுக்கு திரையரங்கில் ஆட்டம் போட காத்திருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு, டுவிஸ்ட் கொடுக்குமா படக்குழு...

தந்தி தொலைக்காட்சி செய்திகளுக்காக சினிமா செய்தியாளர் ராஜா.... 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

75 views

பிற செய்திகள்

திரையரங்கில் நெஞ்சம் மறப்பதில்லை - எஸ்.ஜே.சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு

நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று திரையங்குகளில் வெளியாக உள்ளதாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

14 views

மாஸ்டர் 50வது நாள் கொண்டாட்டம் - டிரெண்டாகும் மாஸ்டர்50 ஹேஸ்டேக்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 50ஆவது நாளை எட்டியுள்ளது.

29 views

வேதாளம் பட தோற்றத்தில் அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

48 views

10 கோடி பார்வைகளை பெற்ற 'செல்லம்மா' - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயனின், டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா என்ற பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

56 views

கர்ணன் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு - 'பண்டாரத்தி புராணம்' பாடலை வெளியிட்ட படக்குழு

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

41 views

'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தின் டீசர் வெளியீடு - ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

280 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.