சித்ரா மரணம் - காவல்துறை விளக்கம்
பதிவு : பிப்ரவரி 02, 2021, 01:09 PM
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே என, நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே என, நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி, தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, கணவர் ஹேம்நாத்தை கைது செய்தார். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக  அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை  பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

409 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

250 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

103 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

57 views

பிற செய்திகள்

காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

7 views

மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.

208 views

ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

11 views

அப்பவே அப்படி... தமிழகத்தின் சுவாரஸ்ய முதல்வர்கள்

சட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

72 views

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - அரசு வாகனங்களை பயன்படுத்த தடை

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது,.

7 views

வாங்கவும் ஆள் இல்லை, விற்கவும் வழி இல்லை - நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில்

வாங்கவும் ஆள் இல்லாமல், விற்கவும் வழி இல்லாமல் நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.