ஒடிடி-யில் மாஸ்டர்- அடுத்து என்ன?

ஒடிடி-யில் மாஸ்டர்- அடுத்து என்ன?
ஒடிடி-யில் மாஸ்டர்- அடுத்து என்ன?
x
மாஸ்டர் திரைப்படம் இன்று ஒ.டி.டி-யில் ரிலீஸ் ஆனதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒடிடியின் ஆதிக்கத்தால் தியேட்டர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை பார்க்கலாம்.

10 மாத காத்திருப்புக்கு பிறகு திரையரங்கிற்கு வந்த விஜயின் மாஸ்டர் படம், பொங்கல் பண்டிகையை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட வைத்தது.

ஊரடங்கால் கலங்கி வந்த திரையரங்கு உரிமையாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துவிட்டது மாஸ்டர்.

100 சதவீத இருக்கைகளுடன் திரையிட அனுமதி மறுக்கப்பட்டாலும், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும் மாஸ்டர் மீதான மவுசு நீடிப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

கொரோனா பீதியால் குடும்பங்கள் வராது என எண்ணிக்கொண்டிருக்க, முதல் நாளிலேயே குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு சென்றனர்.

திரையரங்குகள் இயல்பு நிலைமைக்கு திரும்பும் வாய்ப்பு வந்துவிட்டது என  உரிமையாளர்கள் எண்ணினாலும், OTT என்ற மாய வலை அவர்களை சற்று கலங்க வைக்கிறது.

சூர்யாவின் சூரரைப்போற்று தொடங்கி, க.பெ. ரணசிங்கம், மூக்குத்தி அம்மன் என படங்கள் வரிசை கட்டி ஒ.டி.டி-யில் இறங்கின. 

மாஸ்டரின்  முழுபயனை அறுவடை செய்வதற்குள்ளேயே, ஒடிடிக்கு சென்றுள்ளது திரையரங்கு உரிமையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அமேசான், நெட் பிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி என கார்ப்பரேட்கள், சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை வாங்கி வியாபாரத்தை பெரிதாக்கிவிட்டன. 

ஏற்கனவே திரையுலகில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வர, இந்த விஷயமும் ஒடிடிக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று கூறப்படுகிறது

விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையேயான பிரச்சினையில் சினிமா தயாரிப்பாளர்கள் ஒடிடி பக்கம் போய்விட்டால், பல தியேட்டர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பது சினிமா விமர்சர்களின் பார்வையாக உள்ளது. 

பல சிக்கல்கள் இருப்பதால், மாறுபட்ட ஸ்ட்ரேடஜியை திரைத்துறைக்குள் கொண்டு வருவதற்கான சரியான நேரம் இதுதான் என்பதையும் அவர்கள் முன்வைக்கின்றனர் 

டிக்கெட் கட்டணம் தொடங்கி பல விஷயங்களில் உரிய வழிமுறைகளை வகுத்து திரையரங்குகளின் எதிர்காலம் காக்கப்படுமா?என்பது திரைத்துறையினரின் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்