ஆஸ்கர் நோக்கி... சூர‌ரைப்போற்று
பதிவு : ஜனவரி 27, 2021, 07:54 PM
ஆஸ்கர் விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது சூர‌ரைப்போற்று திரைப்படம்.. இந்த சூழலில் ஆஸ்கர் விருது குறித்தும், அதை வெல்ல சூர‌ரைப்போற்று திரைப்படம் கடக்க வேண்டிய தொலைவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ஆஸ்கர் விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது சூர‌ரைப்போற்று திரைப்படம்.. இந்த சூழலில் ஆஸ்கர் விருது குறித்தும், அதை வெல்ல சூர‌ரைப்போற்று திரைப்படம் கடக்க வேண்டிய தொலைவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம்... சூர‌ரைப்போற்று... 

2010 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படம் மெகா ஹிட் ஆனது.. அதன் பின் ஏழாம் அறிவு தவிர அனைத்து படங்களும் சூர்யா ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 
இந்த நிலையில்,  சுமார் 10 ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டில்,  ஓடிடி  தளத்தில் வெளியான போதும், எல்லா ரசிகர்களையும் கவர்ந்த‌து சூர‌ரைப்போற்று.

சூர்யாவிடம் ஒளிந்து கிடந்த நடிப்பு திறமைகள் மொத்த‌த்தையும், தோண்டி எடுத்திருப்பார் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா... தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே இந்த படத்தை கண்டு பிரம்மித்து போயினர் என்றே கூற வேண்டும்... படத்தை உணர்ந்து பார்த்த ஒருவர் கூட பாராட்டாமல் இருந்த‌தில்லை என்ற அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளும் செதுக்கப்பட்டிருந்த‌ன... 

படம் வெளியானது முதலே, இப்படியொரு படத்தை ஓடிடியில் வெளியிட்டு விட்டார்களே என ரசிகர்கள் பலர் ஆதங்கம் கொண்டனர்... இந்த நிலையில், தான் கொரோனா தாக்கத்தால், ஓடிடியில் வெளியான படங்களையும் விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த‌து. அந்த கோரிக்கை நிறைவேறவும் செய்த‌து...

இதையடுத்து சூர‌ரைப்போற்று திரைப்படம் விருதுகளை வாரிக்குவிக்க தொடங்கியது. அந்த வகையில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் , கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில்  திரையிட தேர்வாகியது சூர‌ரைப்போற்று... இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ்  வரை பறந்த‌து சூர்யாவின் சூர‌ரைப்போற்று என்னும் விமானம்... 

இதே போல, கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சூர‌ரைப்போற்று திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது...

அதன் தொடர்ச்சியாக இன்று சூர்யாவின் வாழ்வில் ஒரு மைல் கல்லாக, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்ய அனுப்ப‌ப்பட்டுள்ளது சூர‌ரைப்போற்று....
 
அதாவது ஆண்டுதோறும் இந்தியா சார்பில் ஒரே ஒரு திரைப்படம் தான் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்... 
இந்திய சினிமாவின் மூத்த கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து அனைத்து படங்களையும் பார்த்து பின்னர் ஒரே ஒரு படத்தை விருதுக்கு பரிந்துரை செய்வார்கள். 

அப்படி பரிந்துரைக்க இந்த படத்திற்கு எல்லா தகுதியும் உள்ளது என்பதை குறிக்கும் விதமாக  சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர்,  சிறந்த இயக்குநர் என பல பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது சூர‌ரைப்போற்று.. 

முதல் முதலாக சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தெய்வமகன் என்ற திரைப்படம்  இந்திய அரசால் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்... அதன் பிறகு, நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம் என கமல் நடிப்பில் உருவான 5 படங்கள் ஆஸ்கார் வரை சென்றன. இதேபோல விசாரணை, மற்றும் பார்த்திபன் நடித்த ஒத்தசெருப்பு ஆகிய திரைப்படங்களும் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டன. 

இந்த பட்டியலில் இடம் பெறுவதற்கு தான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது சூர‌ரைப்போற்று திரைப்படம்... 

இந்த பட்டியலை கடந்து, படத்தில் சூர்யா பேசுவது போல, ஆஸ்கார் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா என விருதை வென்று ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் பேராவலாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

216 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

56 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

536 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

23 views

திரைக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி - கலக்க காத்திருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம்

கார்ட்டூன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி. எலி, பூனை கதாபாத்திரங்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம்

73 views

திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....

123 views

60 லட்சம் பார்வைகளை கடந்த "கர்ணன்" பாடல்

"கர்ணன்" படத்தின் "கண்டா வரச்சொல்லுங்க" என்ற பாடல், யூ டியூப்பில் 60 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

2431 views

சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

641 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.