சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
பதிவு : ஜனவரி 18, 2021, 01:24 PM
மாற்றம் : ஜனவரி 18, 2021, 01:27 PM
சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்,இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் வாரணாசிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில், அங்குள்ள சாலையோர கடையில் உணவு சாப்பிட்ட அஜித், கடை உரிமையாளருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த கடை உரிமையாளர் கூறும்போது, பனாரசி சாட் உணவு வகைகளை அஜித் விரும்பி வாங்கி, நின்று கொண்டே சாப்பிட்டதாகவும், சில உணவு வகைகளை எப்படி தயாரிப்பது என்று கேட்டு வீடியோ பதிவு செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்..

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விஜய்யின் மாஸ்டர்.ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை? ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி? நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் படத்தில் இணைந்த சூரரை போற்று நடிகர் 'D43' படத்தில் இணைந்த கிருஷ்ண குமார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. பெயரிடப்படாத இந்த படம் D43 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில், நடிகர் கிருஷ்ண குமார் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர், சூரரை போற்று திரைப்படத்தில், "சே" என்ற கதாபாத்திரத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தது குறிப்பிடத்தக்கது...

சிம்புவின் 'பத்து தல' ஃபர்ஸ்ட் லுக், மாலை 6.30 மணிக்கு வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்.
நடிகர் சிம்பு நடிக்கும் "பத்து தல" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாலை 6.30 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார். "சில்லுனு ஒரு காதல்" படத்தை இயக்கிய கிருஷ்ணா "பத்து தல" படத்தை இயக்குகிறார். சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் இந்த படத்தில் நடிக்க உள்ளார்..

'தலைவி' பட புதிய புகைப்படம் வெளியீடு - ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள திரைப்படம் தலைவி. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அரவிந்த் சாமியும், கங்கனாவும் சேர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

சந்தானம் நடிக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்' இன்று மாலை 5 மணிக்கு டிரைலர் வெளியீடு
நடிகர் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான "ஏ ஒன்" என்ற படத்தை இயக்கிய ஜான்சனே பாரிஸ் ஜெயராஜ் படத்தையும் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்....
தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

366 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

134 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

84 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

64 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

36 views

பிற செய்திகள்

சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

471 views

அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்- மைதானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

மைதானத்தில் ரசிகர்கள் தன்னிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதாக இந்திய கிரக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

73 views

நடிகர் விஷாலின் 'சக்ரா' படத்திற்கு தடை

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

38 views

'வலிமை' - விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு

நடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.

334 views

"வலிமை" அப்டேட் - அஜித் பரபரப்பு அறிக்கை

வலிமை படத்தின் அப்டேட் என்னவென்று, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க..., நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

93 views

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் - கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.