பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி
பதிவு : ஜனவரி 17, 2021, 11:51 AM
பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
பிறந்தநாளை ரவுடிகள் அரிவாளாலும், பட்டாக்கத்தியாலும் வெட்டி அதை இணையத்தில் வெளியிட்ட சம்பவங்களும், அதுதொடர்பான கைது நிகழ்வுகளும் தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறி வந்தன. சென்னை புறநகர் பகுதியில் ஒன்றாக திரண்ட ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சூழ கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கலந்து கொண்ட ரவுடி பினு உள்ளிட்ட பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் பலரும் அரிவாளால் கேக் வெட்டி டிக் டாக் உள்ளிட்ட பக்கங்களில் பகிர்ந்தனர். அவர்களும் அடுத்தடுத்து  போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பலர் மீது உடனடியாக நடவடிக்கைகளும் பாய்ந்தன. இந்த நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதி, பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய 43 வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் விஜய் சேதுபதி. அப்போது பட்டாக்கத்தியால் அவர் கேக் வெட்டிய புகைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது.. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி தன் தரப்பு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டார். அதில் தன்னுடைய பிறந்தநாளை பட்டாக்கத்தியால் வெட்டும் படம் விவாதத்திற்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக உள்ளதாகவும், அந்த படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடியதால் அதே பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டியதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார். இது ஒரு தவறான முன் உதாரணமாகி விடும் என பலரும் கருத்து தெரிவித்து இப்போது விவாதப் பொருளாகி இருப்பதால் இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

420 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

72 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தின் டீசர் வெளியீடு - ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

56 views

நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ஸ்னீக் பீக் - எஸ்.ஜே .சூர்யாவின் வசனத்திற்கு வரவேற்பு

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ். ஜே சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

74 views

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

24 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

80 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

806 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.