'விசித்திரன்' பட டீசரை வெளியிட்ட சூர்யா - இயக்குனர் பாலா தயாரிப்பில் உருவாகும் 'விசித்திரன்'

நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் பட டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
விசித்திரன் பட டீசரை வெளியிட்ட சூர்யா - இயக்குனர் பாலா தயாரிப்பில் உருவாகும் விசித்திரன்
x
நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் பட டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். மலையாளத்தின் வெளியான ஜோசப் என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கிய பத்ம குமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பாலா தயாரிக்கிறார்...

திரைப்படத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகள்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா நடித்துள்ள முகிழ் என்ற வெப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய்சேதுபதி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். 

நடிகர் ஆரியின் "அலேகா" பட டிரைலர்

நடிகர் ஆரி அர்ஜூனன் நடித்துள்ள அலேகா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ராஜமித்ரன் இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த டிரைலரின் இறுதியில், உன் பெயர் என்ன என்று கேட்பதற்கு, ஜோசப் விஜய் என்று ஆரி கூறுகிறார்... இந்த வசனம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது...

பீட்சா-3 படத்தின் முதல் புகைப்படம் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டான திரைப்படம் பீட்சா. இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது மூன்றாவது பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்குகிறார்..

தனுஷின் 'கர்ணன்' பட புதிய புகைப்படம்

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் கையில் வாளுடன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்ற இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

'மாஸ்டர்' படத்திற்காக சிறப்பு எமோஜி - எமோஜியை வெளியிட்டு விஜய் டுவீட்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு எமோஜியை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுக்கு எமோஜி வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்தை டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

யோகிபாபுவின் பேய் மாமா பட டிரைலர்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்துள்ள பேய் மாமா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்தில், மாளவிகா மேனன், ரமேஷ் கண்ணா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்