2020ஆம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வு - ஸ்பெயினில் எடுத்த வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்
பதிவு : ஜனவரி 01, 2021, 11:06 AM
2020ஆம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகளை நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
2020ஆம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகளை நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்பெயின் சென்ற போது அங்கு படகு ஓட்டிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மோகன்லாலின் "த்ரிஷ்யம்-2" பட டீசர் வெளியீடு - ஓடிடியில் வெளியாகும் "த்ரிஷ்யம்-2"

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் மலையாளத்தில் அடைந்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் இந்த படம் வெளியானது. இதையடுத்து, த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணியை தொடங்கிய படக்குழு, தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த படம் ஓடிடியில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்திலும் வெளியாகும் 'மாஸ்டர்' - விஜய் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கன்னடத்திலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்போது கன்னட மொழியில் மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜெயம் ரவியின் பூமி படத்திற்கு 'யு' சான்றிதழ் - ஜனவரி 14ல் ஓடிடியில் வெளியாகும் 'பூமி'

லக்‌ஷ்மன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் பூமி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 25ஆவது படமான பூமி திரைப்படம் வரும் 14ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூமி படத்திற்கு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் "யு" சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...

20 views

செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

75 views

GODZILLA VS KONG டிரெய்லர் வெளியீடு - சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் GODZILLA VS KONG எனும் ஆங்கிலத்திரைப்படம் வெளியாக உள்ளது.

11 views

நவ. 4-ம் தேதி அண்ணாத்த வெளியீடு - விஜய்யின் தளபதி 65 வெளியாகுமா..?

ரஜினியின் அண்ணாத்த படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

11 views

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

14 views

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கியது - கர்நாடகா அரசு மருத்துவமனை

சசிகலா நாளை விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் நீங்கி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து வருவதாக விக்டோரியா மருத்துமனை தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்போம்........

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.