சூரரைப் போற்று படக்குழுவுக்கு ஜி.ஆர்.கோபிநாத் வாழ்த்து
பதிவு : நவம்பர் 14, 2020, 11:08 AM
சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய சூரரைப் போற்று படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்துவிட்டு கோபிநாத் தன்னுடைய டுவிட்டரில் படக்குழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், சூரரைப் போற்று படத்தில் நிறையக் கற்பனைகள் இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மைய கருவை அற்புதமாக படம் பிடித்துள்ளது. நேற்றிரவு படத்தை பார்த்தேன். உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவமாகும்.  நினைவுகளை தூண்டிய பல குடும்ப காட்சிகளில் என்னால் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறி உள்ளார். மேலும், என்னுடைய மனைவி பார்கவியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் அபர்ணா சரியான தேர்வு என்றும்  தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.  சுதா கொங்கராவுக்கு மிகப்பெரிய சலூட்டை வைப்பதாக கூறியிருக்கும் அவர், இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.  இதற்கு பதில் டுவிட் செய்துள்ள நடிகர் சூர்யா, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது கேப்டன்.. இந்த நாட்டிற்காக நீங்கள் செய்த பணிக்காக எங்களுடைய சிறிய வழியில் மரியாதை செலுத்தியுள்ளோம். பலரும் உத்வேகம் அடைவார்கள் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சூரரைப் போற்று படக்குழுவினரை பாராட்டிய நடிகர் வடிவேலு

சூரரைப்போற்று படக்குழுவினரை நடிகர் வடிவேலு பாராட்டியுள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்ததாகவும், அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌ என்றும் பாராட்டியுள்ளார். இத்தகைய படைப்பை மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  


தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

16 views

பிற செய்திகள்

முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ் - 'D43' படத்தின் 3 பாடல் தயார் என அறிவிப்பு

தனுஷ் - ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் மீண்டும் பிரிவு என தகவல்கள் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

116 views

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேர்தல் - முரளி ராம நாராயணன் உள்ளிட்டோருக்கு பாரதிராஜா வாழ்த்து

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதை வரவேற்பதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

17 views

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் 'சேஸிங்' படத்தின் 'நிமிர்ந்து நில்' பாடல் வெளியீடு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சேஸிங் திரைப்படத்தின், "நிமிர்ந்து நில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

23 views

மாஸ்டர் - தியேட்டரில் வெளியிடவே விருப்பம்" - பட தயாரிப்பு நிறுவனம் தகவல்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

425 views

"பாவ கதைகள்" - ஒடிடி தளத்தில் வெளியீடு -பிரபல நடிகர்கள் பங்கேற்பு

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள "பாவகதைகள்" எனும், ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

162 views

ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.