தடம் இயக்குனருடன் கை கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்
பதிவு : நவம்பர் 07, 2020, 09:06 AM
சைக்கோ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தானே தயாரிக்கின்றார்.
சைக்கோ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தானே தயாரிக்கின்றார். 2019ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான 'தடம்' படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். ஜெயம் ரவியின் 'பூமி', சிம்புவின் 'ஈஸ்வரன்' படங்களில் நாயகியாக களமிறங்கியுள்ள பாலிவுட் நடிகை நிதி அகர்வால் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார். அரோல் கொரெலி இசை, மதன் கார்கி வரிகளில் க்ரைம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

லாக்டவுனில் சிக்கிய பேய்கள் - யோகி பாபுவின் 'பேய் மாமா' ட்ரெய்லர்

யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள பேய் மாமா திரைப்பட ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பெற்ற வசனங்கள், பின்னணி இசை ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ரஜினியின் அரசியல் வருகை பற்றிய வசனமும் இடம்பெற்றுளது. கலகலப்பான பேய் படமாக  உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் ட்ரெய்லரில் அறிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

262 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

116 views

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

349 views

நீண்ட போராட்டத்திற்கு பின் "டெனட்" ரிலீஸ் - டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியீடு

ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்த "டெனட்" திரைப்படம் அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது.

180 views

9 கோடி பார்வைகளை கடந்த "வாத்தி கம்மிங்" பாடல் - நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்" படத்தின் பாடல்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ஈர்த்து வருகிறது.

34 views

90 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய "வாத்தி கம்மிங்" - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்". படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது.

38 views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

133 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.