ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ள தனுஷ் - ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய ரஹ்மான்

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் ஜொலித்து வரும் தனுஷ் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ள தனுஷ் - ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய ரஹ்மான்
x
2004ம் ஆண்டு வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் முதன்முறையாக பாடலை பாடினார் நடிகர் தனுஷ். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதனை தொடர்ந்து, அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் தனுஷ்.

தமிழில் மரியான் திரைப்படத்திற்கும், பாலிவுட்டில் முதன்முறையாக களமிறங்கிய ராஞ்சனா திரைப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் இந்த படங்களில் தனுஷ் பாடாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

இந்நிலையில், மீண்டும் ராஞ்சனா பட இயக்குனர் ஆனந்த்.எல்.ராய்  இயக்கத்தில் தற்போது அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான் தான். ஆனால் இம்முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் தனுஷ். இந்த தகவலை மகிழ்ச்சியுடன் ஒரு புகைப்படம் மூலம் தனுஷே வெளியிட்டுள்ளார். அத்ரங்கி ரே படத்திலிருந்து இந்த பாடலை தான் முதலில் வெளியிட வேண்டும் என இப்போதே ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்