நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ
பதிவு : அக்டோபர் 26, 2020, 06:13 PM
நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க, எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒரு நபர் விஜய் சேதுபதி மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசி, ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரின் ஐபி அட்ரஸ் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். இதில், ஐபி முகவரி இலங்கையிலுள்ளது என தெரியவந்தது. இதையடுத்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் அந்த நபரை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். 

இந்த நிலையில் விஜய் சேதுபதி மகள் குறித்து கருத்து பரப்பியது தான் என ஒருவர் பேட்டி அளித்து, வேலை இன்மை காரணமாகவும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாலும் இவ்வாறு செய்து விட்டதாக கூறி, மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில், வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பும் போது, வீடியோ தொடர்பான அறிக்கையயையும் அனுப்ப முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் - யாருக்கு வாய்ப்பு?

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை தந்தி டிவி ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...

24 views

"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

181 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

120 views

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்

சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23545 views

கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர்.

66 views

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் - பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு என தகவல்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மற்றும் சிலை விரைவில் நிறுவப்படவுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.