விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தாமதம் - விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்ப்பு

விஜய் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.
விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தாமதம் - விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்ப்பு
x
விஜய் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக  படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.  
விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், படத்துக்கு ரெட்டை தோட்டா என்று பெயர் வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்  அதனை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

Next Story

மேலும் செய்திகள்