விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு - எதிர்ப்புகளை தாண்டி எடுத்த முடிவில் உறுதி
பதிவு : அக்டோபர் 14, 2020, 10:07 AM
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஒரு நடிகர் என்பதையும் தாண்டி , சிறந்த மனிதர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி .ரசிகர்களை சந்திக்கும்போதெல்லாம் முத்தங்களை வாரி வழங்கி பாசத்தை வெளிப்படுத்துவார். ஆனால் தற்போது ரசிகர்களின் எதிர்ப்பை மீறி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை அவர் எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் 800 என்ற படத்தில் தான் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக , விஜய் சேதுபதி நடிக்கிறார். அந்த படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
முத்தையா முரளிதரன் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர், தலை சிறந்த பந்து வீச்சாளர் என்ற பெருமைகள் ஒருபுறம் இருந்தாலும், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவாளராக இருப்பது தான்  பிரச்சனை. 
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் கோட்டாபய ராஜபக்ச. தமிழர்களுக்கு எதிரானவர் என்ற முத்திரையும் அவர் மீது உள்ளது. ஆனால், ஒரு தமிழராக தான் எந்த பிரச்சனையையும் சந்தித்தது இல்லையென்றும், இலங்கையின் அதிபராக இருக்க சரியான நபர் கோட்டாபய ராஜபக்ச என்றும் பேசியிருந்தார் முத்தையா முரளிதரன். மேலும், இலங்கையில் பல லட்சம் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சவை, நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு பேசியிருந்ததாகவும் முரளிதரன் மீது குற்றச்சாட்டு உள்ளது.இப்படிப்பட்ட நபரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என இலங்கை தமிழர்கள் , தமிழகத்தில் உள்ள ரசிகர்கள், அரசியல் கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #BoycottVijaySethupathi , #Boycott800 என்று சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர். தென் மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமியும், டவீட் மூலம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகத்தை ஆதரிக்கும் வகையில் விளம்பரத்தில் நடித்ததற்காக எதிர்ப்பை சம்பாதித்த விஜய் சேதுபதி, தற்போது புதிய சிக்கலில் மாட்டியுள்ளார். மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர், மக்களிடம் பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

448 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

212 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

76 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

30 views

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

497 views

ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்த விஜய்...கொரோனா காலத்தில் அவசர சந்திப்பு... காரணம் என்ன?

கொரோனா பரபரப்புக்கு மத்தியிலும், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது, விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனை என்ன...? விவரிக்கிறது இந்த தொகுப்பு...

120 views

சிம்புவின் "ஈஸ்வரன்"- மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஈஸ்வரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

183 views

'கைதி' வெளியாகி ஓராண்டு நிறைவு - படக்குழு, நடிகர்களுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

15 views

பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.

178 views

"26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது சூர‌ரை போற்று டிரைலர்- சூர்யா தகவல்

சூர‌ரை போற்று திரைப்படத்திற்கு என்.ஓ.சி வழங்கிய இந்திய விமான படைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

1073 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.