நடிகர் சூரியிடம் மோசடி... சிக்கிய முன்னாள் டிஜிபி...
பதிவு : அக்டோபர் 09, 2020, 05:27 PM
நடிகர் வடிவேலுவை போல காமெடியில் தனித்துவம் பெற்ற நடிகர் சூரி, இப்போது அவரைப்போலவே நில மோசடியில் பணத்தை இழந்து நீதிமன்றத்தின் படியேறி இருக்கிறார்.
நடிகர் வடிவேலுவை போல காமெடியில் தனித்துவம் பெற்ற நடிகர் சூரி, இப்போது அவரைப்போலவே நில மோசடியில் பணத்தை இழந்து நீதிமன்றத்தின் படியேறி இருக்கிறார். சூரிக்கு நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.

குறுகிய காலத்தில் நகைச்சுவை நாயகனாக தடம் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி... முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த சூரி, 2015ஆம் ஆண்டில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தமானார். அப்போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா. இந்த படத்திற்காக சூரிக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம் அப்போது பேசப்பட்டது. படத்தின் மற்றொரு தயாரிப்பாளராக அன்புவேல் ராஜனும் இருந்துள்ளார். 

விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா காவல்துறையில் ஏடிஜிபியாக இருந்தார். சூரிக்கு அந்த சமயத்தில் தனிப்பட்ட பிரச்சினை ஒன்று வரவே, அதை சுமூகமாக தீர்த்து வைத்திருக்கிறார் ரமேஷ் குடவாலா. இதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் நம்பிக்கையும் இருந்துள்ளது. 

இதனிடையே, நிலத்தில் முதலீடு செய்ய தனக்கு விருப்பம் இருப்பதை விஷ்ணுவிடம் எதேச்சையாக சூரி கூறவே, அதை தன் தந்தை ரமேஷ் குடவாலாவிடம் கூறியிருக்கிறார் அவர். அப்போது சிறுசேரியில் ஒரு இடம் இருப்பதாக கூறிய ரமேஷ் குடவாலா, படத்தின் சம்பளத் தொகை ஏற்கனவே நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி மீதமுள்ள பணத்தை கொடுத்தால் போதும் என கூறியிருக்கிறார். 

இதையடுத்து நடிகர் சூரியும் 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை தந்துள்ளார். ஆனால் சொத்தை வாங்க ஒப்பந்தம் போட்ட சில நாட்களிலேயே அதில் வில்லங்கம் இருப்பதை அறிந்துள்ளார் சூரி. 

நிலத்தின் ஆவணங்களை சோதனை செய்த போது, அது ஒன்றரை கோடி மதிப்புள்ள சொத்து தான் என்றும், ஊர் தலைவர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி அதிக மதிப்பு காட்டி சூரியிடம் ரமேஷ் குடவாலா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ந்து போன சூரி, தன் பணத்தை திரும்ப தருமாறு கூறியிருக்கிறார். 

ஆனால் அவர்கள் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் சூரியின் வற்புறுத்தல் அதிகமாகவே, 2018ஆம் ஆண்டில் விஷ்ணு விஷாலின் வங்கிக் கணக்கில் இருந்து சூரிக்கு 40 லட்ச ரூபாய் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அப்போதே மீதமுள்ள 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துள்ளனர். 

ஆனால் 2 வருடங்கள் கடந்த போதிலும், பணம் கைக்கு கிடைக்காததால் சூரி, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரில் சம்பந்தப்பட்டவர் முன்னாள் டிஜிபி என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் சில வாரங்களுக்கு முன்பாக புகார் கொடுக்க வந்த சூரியிடம் பஞ்சாயத்து பேசி திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன்பிறகும் பணம் கைக்கு வராததால் பொறுமை இழந்து போன சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்தார். 

அதில் ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக கூறி அதற்கான ஆவணங்களை சமர்பித்ததோடு, தன் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முன்னாள் டிஜிபியான ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது வழ​க்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. 

இந்த உத்தரவின் பேரில், ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகிய 2 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி புகார் என்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மோசடி புகாரில் முன்னாள் காவல்துறை அதிகாரி சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் இந்த வழக்கில் விஷ்ணு விஷாலும் சிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் நடிகர் வடிவேலுவின் இடத்தை நிரப்பிய சூரியும் இப்போது அவரைப் போலவே நில மோசடியில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்... 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

400 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

181 views

"நீட் தேர்வு முடிவுகள் வரும்16 ஆம் தேதி வெளியிடப்படும்" - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

180 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

56 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

38 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

18 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

25 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.