விரைவில் "சூரரை போற்று" பட டிரைலர்
பதிவு : அக்டோபர் 04, 2020, 07:20 PM
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் பின்னணி இசை பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டிரைலர் மிக விரைவில் வெளியாகும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


96 திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு - ட்ரெண்டாகும் 2YearsofRamJaanu ஹேஸ்டேக்

96 திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதை அடுத்து, சமூக வலைதளங்களில் 96 படம் குறித்த நினைவுகளை சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் ராம் குமாருக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் ராம், ஜானு குறித்த தங்களது நினைவுகளை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

வாழ்த்து கூறியவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி - "திரையுல வாழ்வில் மிக முக்கிய படம்"

ஓடிடியில் வெளியாகியுள்ள, க/பெ ரணசிங்கம் படத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது திரையுல வாழ்க்கையில் க/பெ ரணசிங்கம் மிக முக்கியமான படம் என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு இல்லையென்றால் திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்பட்டிருக்கும் என கூறியுள்ள அவர், அனைவரின் கருத்துக்களையும் இதயத்தின் ஓரத்தில் வைத்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ஓடிடியில் வெளியாகியுள்ள க/பெ ரணசிங்கம் படத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து தெரிவித்து நடிகை கீர்த்தி சுரேஷ் ட்வீட் செய்துள்ளார். அதில், க/பெ ரணசிங்கம் படம் குறித்து வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துவதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
----

கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரம் நட்ட திரிஷா

கிரீன் இந்தியா சவாலை ஏற்று, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரீன் இந்தியா சேலஞ்ச் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சவாலை ஏற்று ஏற்கனவே நடிகர்கள் விஜய், மகேஷ் பாபு, பிரகாஷ் ராஜ், சமந்தா ஆகியோர் மரம் நட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது திரிஷாவும் மரம் நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

நடிகை பிரகதி மகாவதி வெளியிட்டுள்ள நடன வீடியோ

பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான பிரகதி மகாவதி உடற்பயிற்சி செய்து நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஊரடங்கு தொடங்கியது முதலே, தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய அவர் அந்த வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இவர் தற்போது பதிவிட்டுள்ள நடன வீடியோவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர். 

விரைவில் துருவ நட்சத்திரம் படத்தின் ஒரு மனம் பாடல்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதையடுத்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் என்ற பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

504 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

102 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

85 views

பிற செய்திகள்

ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

59 views

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

251 views

நீண்ட போராட்டத்திற்கு பின் "டெனட்" ரிலீஸ் - டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியீடு

ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்த "டெனட்" திரைப்படம் அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது.

138 views

9 கோடி பார்வைகளை கடந்த "வாத்தி கம்மிங்" பாடல் - நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்" படத்தின் பாடல்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ஈர்த்து வருகிறது.

24 views

90 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய "வாத்தி கம்மிங்" - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்". படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது.

33 views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.