Article15 சினிமாவும்... ஹத்ராஸ் சம்பவமும்...
பதிவு : அக்டோபர் 02, 2020, 01:51 PM
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
கடந்த வருடம் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில்  வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் Article15. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article15இன் படி சக இந்தியர்களை மத, இன, சாதி, பாலின, மற்றும் பிறப்பிட அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. 

Article15 திரைப்படத்தின் கதைப்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் இரண்டு பட்டியலின சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழக்க, மூன்றாவதாக இன்னொரு சிறுமியும் மாயமாகிறார். 

இந்த வழக்கு குறித்து அந்த ஊருக்கு புதிதாக வரும் ஐபிஎஸ் அதிகாரியான கதாநாயகன் துப்பு துலங்குகிறார். 

விசாரணையின் போக்கில், அக்கிராமத்தில் பட்டியலின மக்கள் நடத்தப்படும் விதம், மற்றும் அவர்களுக்கெதிரான தீண்டாமைக் கொடுமைகள் உள்ளிட்டவை கண்டு அதிர்ச்சி அடையும் நாயகன், சிறுமிகளின் மரணத்திற்கும், அவர்களது சாதிக்கும் உள்ள இணைப்பை அறிவது போல் கதை நகரும்... 

நாயகனோடு சேர்த்து படம் பார்த்த கள எதார்த்தம் அறியாத நகரவாசிகளையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்த திரைப்படம்.


அதேபோன்ற அதிர்ச்சியைதான் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. சம்பவம் நடந்த ஹத்ராஸ் மாவட்டம், பூள்கர்ஹி கிராமத்தில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் இன்றும் மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் தாக்கூரின் குடும்பத்தினரே, 20 வருடங்களுக்கு முன்பு, உயிரிழந்த இளம்பெண்ணின் தாத்தாவை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கி யிருக்கிறார்கள்.

இறந்த இளம்பெண்ணையும், கடந்த 6 மாதங்களாகவே பின்தொடர்ந்தும், தொல்லைகொடுத்தும், தகாத வார்த்தைகளை பேசியும், துன்புறுத்தி இருக்கிறான், சந்தீப்.

பட்டியலினத்தை சேர்ந்த 15 குடும்பங்கள் மட்டுமே தற்போது உள்ள நிலையில், அவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து இந்த கிராமத்தை விட்டு அனுப்பி விட வேண்டும் என்பதுதான் இம்மக்களின் கனவாக இருக்கிறது. 

அங்கு நடக்கும் கொடுமைகள் இம்மரணத்தால் வெளி வந்துள்ளதால்,  தன் குடும்பத்திற்கு ஆபத்து வருமோ என அந்த இளம்பெண்ணின் தந்தை அஞ்ச, தன் மகளுக்கு நியாயம் கிடைத்தே தீரவேண்டும் என்ற அந்த தாயின் அழுகுரல் இந்தியாவின் மனசாட்சியாக ஒலிக்குமா?

பிற செய்திகள்

மாஸ்டர் - தியேட்டரில் வெளியிடவே விருப்பம்" - பட தயாரிப்பு நிறுவனம் தகவல்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

365 views

"பாவ கதைகள்" - ஒடிடி தளத்தில் வெளியீடு -பிரபல நடிகர்கள் பங்கேற்பு

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள "பாவகதைகள்" எனும், ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

150 views

ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

124 views

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

355 views

நீண்ட போராட்டத்திற்கு பின் "டெனட்" ரிலீஸ் - டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியீடு

ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்த "டெனட்" திரைப்படம் அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது.

187 views

9 கோடி பார்வைகளை கடந்த "வாத்தி கம்மிங்" பாடல் - நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்" படத்தின் பாடல்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ஈர்த்து வருகிறது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.