போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்
பதிவு : செப்டம்பர் 27, 2020, 09:11 AM
மாற்றம் : செப்டம்பர் 27, 2020, 09:17 AM
போதைப் பொருள் விவகாரத்தில் ஆஜரான நடிகை தீபிகா படுகோன், தனது மேலாளர் உடனான உரையாடல் உண்மை தான் என ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில் நடிகைகள் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ஏற்கனவே ரகுல் ப்ரீத் சிங் ஆஜரான நிலையில் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர். மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரான தீபிகாவிடம் அதிகாரிகள் பல அதிரடியான கேள்விகளை முன்வைத்தனர். அப்போது தன்னுடைய மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் உடனான உரையாடல் குறித்த கேள்வியை முன்வைத்த போது தீபிகா அதை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கிட்டத்தட்ட 5 மணி நேரம் தீபிகாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

"சுஷாந்த் சிங் மரணத்தை முன்வைத்து பாஜக அரசியல் செய்கிறது"

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை முன்வைத்து பாஜக அரசியல் செய்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடத்திய விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை என கூறியிருக்கும் கட்சியின் மூத்த தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி, இப்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு விசாரணை தான் வெளிவந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த துறையினர் நடத்தும் விசாரணையில் தொடர்ந்து நடிகைகள் மட்டும் சிக்குவது எப்படி? என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் பாஜகவுக்கு நெருக்கம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.


போதைப்பொருள் வழக்கு செய்திகளை வெளியிடக் கூடாது - ரகுல் பிரீத் சிங் வழக்கு

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, தன்னைப் பற்றிய செய்திகளுக்கு தடை கோரி, நடிகர் ரகுல் பிரீத் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், டிவி மற்றும் செய்தித் தாள்களில் தன்னைப் பற்றிய செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.