ஆக.5-ல் மருத்துவமனையில் எஸ்.பி.பி அனுமதி - ஆக.20-ல் கூட்டு பிரார்த்தனை நடத்திய திரையுலகம்
பதிவு : செப்டம்பர் 25, 2020, 10:10 AM
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடந்த 50 நாட்களில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை குறித்த விவரங்களை பார்ப்போம்.......
கடந்த மாதம் 5ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார். தேவையற்ற வதந்திகளை தவிர்ப்பதற்காக தனது உடல்நலம் குறித்தும், மருத்துவமனையில் சேர்ந்தது குறித்து அவரே வீடியோ வெளியிட்டார்..

தொடக்கத்தில் அவருக்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், கடந்த மாதம் 12ஆம் தேதி, தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்... மூச்சுவிட அவர் தடுமாறியதால், 13ஆம் தேதி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கொரோனாவும் சேர்ந்து தாக்கியதால், பெரும் பாதிப்புக்குள்ளாகிய அவர், தீவிர சிகிச்சையின் பலனாக அதிலிருந்து மீண்டார்...

"பாடும் நிலா மீண்டு வா" என்று இந்திய திரையுலகமே 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தியது.. திரையுலகினரும், மெல்லிசை கலைஞர்களும், இசை ரசிகர்களும், பாலசுப்ரமணியம் நலம்பெற உருக்கமாக பிரார்த்தித்தனர்..கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது... 21ஆம் தேதி முதல் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தென்பட்டது... வெளிநாட்டு மருத்துவர்கள் உதவியுடன் அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சை அவருக்கு கை கொடுத்தது... 

மெல்ல மெல்ல அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு பிசியோதெரபி அளிக்க தொடங்கினார்கள் மருத்துவர்கள்... 31ஆம் தேதி அவருக்கு சுயநினைவு திரும்பியது... கடந்த 3ஆம் தேதி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது... இதனை தொடர்ந்து அவரை 15 நிமிடம் அமர வைத்து, சிகிச்சையை தொடர்ந்தனர் மருத்துவர்கள்....கடந்த 8ஆம் தேதி அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும், எக்மோ சிகிச்சை மட்டும் தொடர்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது...

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

349 views

"நீட் தேர்வு முடிவுகள் வரும்16 ஆம் தேதி வெளியிடப்படும்" - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

174 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

140 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

127 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

42 views

பிற செய்திகள்

ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 views

ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்

ஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

6 views

தமிழகத்தில் 7 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

99 views

7.5 சதவீதம் இடஒதுக்கீடு - ஆளுநர் ஸ்டாலினுக்கு கடிதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

268 views

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

35 views

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் விவகாரம் - மாணவர்களைக் குழப்பிய சுற்றறிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.

238 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.