நடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது புகார் - கொலை மிரட்டல் விடுத்ததாக பூனம் பாண்டே குற்றச்சாட்டு

நடிகை பூனம் பாண்டேவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் காதல் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது புகார் - கொலை மிரட்டல் விடுத்ததாக பூனம் பாண்டே குற்றச்சாட்டு
x
1991ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்தவர் பூனம் பாண்டே. மாடல் அழகியான இவர்  பேஷன் இதழ் ஒன்று நடத்திய அழகிப் போட்டியில், முதல் ஒன்பது இடங்களில் தேர்வாகி அட்டை படத்தில் இடம் பிடித்தார். அதன் பிறகு, தனது அழகை அரைநிர்வாண புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு,  இளைஞர்களை தனது ரசிகர்களாக மாற்றினார்.  

2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் செல்ல தயார் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார், பூனம்...ஊடங்களில் பரபரப்பு செய்தியாக மாறிய பூனம் பாண்டே 2013ஆம் ஆண்டில் நிஷா என்ற பாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தனக்கென தனி இணையதளத்தை உருவாகி அதில் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி இளைஞர்களை தம் பக்கம் ஈர்த்தார், பூனம் பாண்டே. இந்நிலையில்தான், தனது காதலர் சாம் பாம்பே என்பவரை  திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஜூலை 23ஆம் தேதி சமூக வலைதளத்தில் தெரிவித்தார், பூனம் பாண்டே...

செப்டம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர். செப்டம்பர் 10ஆம் தேதி கணவருடன் திருமண கோலத்தில் தம்பதியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாண்டே, ஏழு ஜென்மங்களும் சேர்ந்தே இருக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். தேனிலவு கொண்டாட கோவாவுக்கு சென்றிருந்த பூனம் பாண்டே, கடந்த வெள்ளிக்கிழமை கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே தனது கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் உடனடியாக சாம் பாம்பேவை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவாவில் உள்ள கனகோனா கிராமத்தில் தனது கணவர் சாம் பாம்பே உடன் இருந்த சூழலில் திங்கள்கிழமை இரவு தன்னை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தார் என புகாரில் பூனம் பாண்டே தெரிவித்ததாக கனகோனா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் தெரிவித்துள்ளார். மாடல் அழகியான பூனம் பாண்டே அரை நிர்வாண வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆனது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தற்போது அவர் அளித்துள்ள புகாரில் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தான்...


Next Story

மேலும் செய்திகள்