விஸ்வரூபம் எடுத்து நிற்கும் போதைப் பொருள் விவகாரம் - தீபிகா படுகோன் மேலாளருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்
பதிவு : செப்டம்பர் 23, 2020, 08:09 AM
போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து திரை பிரபலங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரும் இதில் சிக்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
நடிகர் சுஷாந்தின் மரணம் பாலிவுட்டின் பல பகீர் பக்கங்களை  அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது… சுஷாந்த் தற்கொலை தொடர்பான விசாரணைகளின் போது தான் அவரது காதலியான ரியா சக்ரபோர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் கர்நாடக நடிகைகளான ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 
இதைத் தொடர்ந்து ரியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது  , பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகைகள், நடிகர்கள் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் வெளியிட்ட பட்டியல் எல்லாமே இன்டஸ்ட்ரியில் பிரபலமானவர்கள் என்பது தான் அதிர்ச்சி… 
இந்த வரிசையில் சிக்கியவர் நமக்கெல்லாம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர். 

இவரைத் தொடர்ந்து நடிகர் சயீப் அலிகானின் மகளான சாரா அலிகான் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபட்டது. அதேபோல் இந்தியில் பிரபல நடிகையான ஷ்ரத்தா கபூரும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என்றம் கூறப்படுகிறது. 

இதுதொடர்பான விசாரணைகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த போது தான் அடுத்த பகீர் தகவல் வெளியானது. 

நடிகை தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷ் இப்போது இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். தீபிகாவின் படங்களை நிர்வகித்து வரும் இவர், போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததற்கான வாட்ஸ் அப் உரையாடல்களும் சிக்கியிருக்கின்றன. இதை ஆதாரமாக வைத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கரிஷ்மா பிரகாஷ்க்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர். மேலும் தீபிகாவுடன் சங்கேதமான பாஷையில் கரிஷ்மா உரையாடியதாக ஆதாரமும் வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது. அந்த வாட்ஸ் அப் உரையாடலில் மால், ஹாஷ் இருக்கிறதா? என்றும் கேள்விகள் இருக்கிறது. கஞ்சா வேண்டாம்.. எத்தனை மணிக்கு அதை கொண்டு வந்து தருவீர்கள்? என்பது உள்ளிட்ட வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று சுற்றி வருகிறது. அதுவும் இந்த உரையாடல் 2017ல் நடந்தது என்ற விபரமும் கசிந்துள்ளது. அப்படி என்றால் பல வருடங்களாக போதைப் பொருள் புழக்கம் பாலிவுட்டில் பரவிக்கிடந்திருக்கிறது என்பதை தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

இதில் D என குறிப்பிடப்பட்டிருப்பது யார்? K என்ற பெயருடையவர் யார்? என விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் பாலிவுட் பரபரத்து கிடக்கும் நிலையில் ட்விட்டரில் தீபிகாவை வம்புக்கு இழுத்துள்ளார் கங்கனா ரணாவத். போதைப்பொருள் பயன்படுத்துவோர் மன அழுத்தத்தில் தான் இருப்பார்கள் என்றும் அவர்கள் தங்கள் மேனேஜர்களிடம் பொருள் இருக்கிறதா? என கேட்பார்கள்" எனவும் நேரடியாகவே சீண்டியிருக்கிறார் கங்கணா.  கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போது சுஷாந்த் மரணம் வேறொரு புயலை கிளப்பி அதில் பலரையும் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக வலைதளங்களில் மீண்டும் நடிகர் சிம்பு - 'Atman-SilambarasanTR' - வீடியோ வெளியிட்ட சிம்பு

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த நடிகர் சிம்பு தற்போது மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற அனைத்து தளங்களிலும் இணைந்துள்ளார்.

47 views

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடனம் - இன்ஸ்டாகிராமில் வீடியோவுக்கு பாராட்டு

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா, தான் நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

142 views

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

புதிய படத்தின் படப்பிடிப்பை தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர் தமன், மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கும் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

151 views

நடிகை ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ

நடிகை ஆண்ட்ரியா தாம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

1086 views

4 மில்லியன் பார்வைகளை கடந்த 'அண்ணாத்த' டைட்டில் மோஷன் போஸ்டர்

ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் அண்ணாத்த.

7080 views

"சக்ரா" படத்தை ஓடிடி- யில் வெளியிட தடை கோரிய வழக்கு - ரூ.4 கோடி உத்தரவாதத்தை, நடிகர் விஷால் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

'ஆக்‌ஷன்' பட நஷ்டம் குறித்து விஷால் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாததால், சக்ரா திரைப்படத்தை வெளியிட 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

307 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.