நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் - Me too இயக்கத்தில் பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ்
பதிவு : செப்டம்பர் 20, 2020, 05:18 PM
பாலிவுட்டில் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மீ டூ இயக்கத்தின் கீழ் பாலியல் புகார் தெரிவித்திருப்பது திரை உலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது...
இந்தி பட உலகில் அதிரடியான தன் படங்களால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப்.  இவரின் படங்கள் வெளியாகும்  போது பரபரப்பும் சேர்ந்தே வரும். காரணம் நடந்த சம்பவங்களை எல்லாம் படமாக்கி சர்ச்சையையும் சேர்ந்தே கொண்டு வருவார்.. இவரின் அடையாளமாக கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், பிளாக் பிரைடே உள்ளிட்ட படங்களை சொல்லலாம். தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் அனுராக். அவ்வப்போது ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைகளை சந்திக்கும் இவர், இப்போது சிக்கியிருப்பது மீ டூ புகாரில்... இவர் மீது பாலிவுட் நடிகை பாயல் கோஷ் பரபரப்பான புகாரை அளித்திருக்கிறார்... 

இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறியதாக இப்போது மவுனம் கலைத்திருக்கிறார். மீ டூ இயக்கம் தீவிரமாக இருந்த போதே தான் அதைப் பற்றி பேச நினைத்ததாகவும், ஆனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்பதால் எதுவும் பேசவில்லை என கூறியிருக்கிறார். பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை வரவழைத்து கட்டாயப்படுத்தி அத்துமீற அனுராக் முயன்றார் என கூறியிருக்கும் பாயல், அவரிடம் கெஞ்சி தப்பி வந்து விட்டேன் என கூறியிருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது... 

அப்போது நடந்த சம்பவத்திற்கு தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை என கூறியிருக்கும் அவர், யாரேனும் உங்களை வேலைக்காக அணுகினால் அவர் எதற்கும் தயார் என்று அர்த்தமில்லை என்றும் காட்டமாகவே கூறியிருக்கிறார். ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், பாயலின் புகார்கள் ஆதாரமற்றவை என அனுராக் காஷ்யப் விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் வெளியானதில் இருந்து தனக்கு ஏகப்பட்ட செல்போன் அழைப்புகள் வருகின்றன என்றும், வீசப்பட்ட அம்புகள் விரைவில் வீழ்ந்து விடும் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார் அனுராக். 

அதேநேரம் நடிகை பாயலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார் கங்கனா ரணாவத். ஏற்கனவே அனுராக் காஷ்யப்புக்கும் கங்கனாவுக்கு ட்விட்டரில் வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் பாயலுக்கு ஆதரவாக இறங்கி அனுராக்கை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார் கங்கனா. கிட்டத்தட்ட 3 வருடங்களாக மீ டூ இயக்கத்தில் பலரும் சிக்கிய நிலையில் இப்போது அனுராக் காஷ்யப் மீது புகார்களை அள்ளி வீசியிருக்கும் பாயல் கோஷ், அவர் மீது நடவடிக்கை எடுங்கள், தனக்கு உதவுங்கள் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருப்பது பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

572 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

140 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

85 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

7 views

பிற செய்திகள்

பாடகியான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் - இணையதளத்தில் வேகமாக பரவும் பரிஸ்டான் பாடல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடிய பாடல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

1611 views

5 மொழிகளில் சிம்புவின் 'ஈஸ்வரன்' - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

665 views

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

277 views

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" எனவும் "மிகவும் மதிப்புக்குரியவர் அக்‌ஷய் குமார்"எனவும் "மதிப்பிற்குரிய பிரபலம் அமிதாப் பச்சன்" எனவும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

1522 views

தீபிகா படுகோனின் மேலாளர் வீட்டில் சோதனை - போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

135 views

அரசியலில் குதித்தார் நடிகை பாயல் கோஷ் - இந்திய குடியரசு கட்சியில் இணைத்துக் கொண்டார்

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது சமீபத்தில் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்திய இந்தி நடிகை பாயல் கோஷ் அரசியலில் இறங்கியுள்ளார்.

444 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.