மிஷ்கின் இயக்கும் 'பிசாசு-2'
பதிவு : செப்டம்பர் 20, 2020, 09:54 AM
மாற்றம் : செப்டம்பர் 20, 2020, 10:03 AM
பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை இயக்குகிறார்.
பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிக திகில் காட்சிகள் இடம்பெறும் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதன் முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறுகிறது.

"அந்தாதுன்" தெலுங்கு ரீமேக்கில் சர்ச்சை வேடத்தில் தமன்னா

பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைபடம், அந்தாதுன்.  நடிகை தபு கணவரை விட்டு வேறொருவருடன் தவறான உறவு வைத்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன, என்பது குறித்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதன் தெலுங்கு ரீமேக்கில், நிதின் ஹீரோவாகவும், தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை மெர்லபகா காந்தி இயக்குகிறார்.

சிக்ஸ்பேக் தோற்றத்தில் சூரி
 
பிரபல காமெடி நடிகர் சூரி, தனது சிக்ஸ் பேக் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இவர் ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக்குடன் தோன்றிய நிலையில், தற்போது தனது கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு

37 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு திரைப்படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் கதாநாயகனாக சசிக்குமாரும், கதாநாயகியாக ஐஷ்வர்யா ராஜேஷூம் நடிக்க உள்ளனர். கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்கியராஜ் எழுதுகிறார். இந்த திரைப்படத்தை 2021ஆம் ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.