சீனா உடன் முழு அளவிலான போருக்கு இந்தியா தயார் - ஓய்வு பெற்ற பிரிகேடியர் கருத்தை நிராகரித்த ராணுவம்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 11:24 AM
சீனா உடன் முழு அளவிலான போருக்கு இந்தியா தயார் என்ற, ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஹேமந்த் மகாஜன் தெரிவித்த கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.
எந்த நேரத்திலும், குறிப்பாக குளிர்காலத்தில் கிழக்கு லடாக் பகுதியில், சீனா முழு நேர போருக்கு உண்டான சூழ்நிலையை உருவாக்கினால், அதனை எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஹேமந்த் மகாஜன் தெரிவித்துள்ளார். மேலும், தலை சிறந்த பயிற்சி பெற்ற, போருக்கு சிறந்த முறையில் தயாராகி உள்ள, உளவியல் ரீதியாக திடமான இந்திய வீரர்களை களத்தில் சீனா எதிர்கொள்ளும் நிலை வரும் என ஹேமந்த் மகாஜன் தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய வடக்கு  மண்டல ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்த தகவல் வடக்கு மண்டல ராணுவ தலைமை மற்றும் இந்திய ராணுவத்தின் பார்வை அல்ல என தெளிவுப்படுத்தி உள்ளார். அவருடைய கருத்து நிராகரிக்கப்பட்டது என கருதலாம் எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.