"பூங்காவில் உடற்பயிற்சி செய்த எங்களை தாக்கினர்" - நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 05:26 PM
பெங்களூருவில் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யச் சென்றபோது தன்னையும் தனது நண்பர்களையும் பொதுமக்கள் தாக்கியதாக நடிகை சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில் 'கோமாளி' 'பப்பி'  'வாட்ச்மேன்', உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சம்யுக்தா. இவரும் இவரது நண்பர்களும் பெங்களூவில் பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் அரைகுறையாக ஆடை அணிந்திருப்பதாக கூறி, கவிதா ரெட்டி என்பவர் தட்டிக்கேட்தாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் கூடும் பொது இடத்தில், இப்படி அரைகுறையாக உடற்பயிற்சி செய்ய வரலாமா என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது எழுந்த வாக்குவாதத்தில், சம்யுக்தா ஹெக்டேவை, சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.  இந்த தாக்குதல் வீடியோவை நடிகை சம்யுத்தா, தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் - தாக்குதல் காட்சியை இணையத்தில் பதிவிட்ட நடிகை சம்யுக்தா ஹெக்டே

இது குறித்து காவல் நிலையத்தில், சம்யுத்தாவும், கவிதா ரெட்டியும்  ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்,  தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று, சம்யுக்தா இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

44 views

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

420 views

"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை" - மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார்.

12494 views

மருத்துவ நிபுணர்களுடன் 29ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

82 views

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கலில் முறைகேடு - ஒப்பந்ததாரர்கள் புகார்

நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடந்து வருவதாகவும் , ஒரு பணிக்கு அதிகாரிகள், 25 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், பாதிக்கப்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

45 views

கொரோனா தடுப்பு பணிகள் - மாநில பேரிடர் நிவாரண நிதியில் 50% செலவழிக்கலாம்

கொரோனா தொடர்பான தடுப்பு பணிகளுக்காக மாநில அரசுகள், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 சதவீத தொகையை செலவழித்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.