ஓடிடி எதிரான பிரச்சனை "சூர்யாவிற்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பிவிடப்பட்டுள்ளது" - இயக்குனர் பாரதிராஜா

ஓடிடிக்கு எதிரான பிரச்சனை சூர்யா என்ற தனி நபருக்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பிவிட்டுள்ளதாக, இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஓடிடி எதிரான பிரச்சனை சூர்யாவிற்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பிவிடப்பட்டுள்ளது - இயக்குனர் பாரதிராஜா
x
அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், திரைப்படத்தில் சம்பாதித்ததை, திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே என்று கூறியுள்ளார்.
அதில் நடிகர் சூர்யா குறிப்பிடத் தகுந்தவர் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஓடிடி எதிரான பிரச்சனை சூர்யாவிற்கு எதிராக திருப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள் என்று கூறியுள்ளார்.சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள், மனம் வலிக்கிறது என்று கூறியுள்ள பாரதிராஜா, தனிநபர் இடைவெளியுடன் காண, ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில், சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்று கூறியுள்ள பாராதிராஜா, தயாரிப்பாளர்கள், தியேட்டர்உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே, வாருங்கள், பேசித்தீர்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்