நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள 'அண்டாவ காணோம்' - படத்தை வெளியிட இடைக்கால தடை

நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம் என்ற படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள அண்டாவ காணோம் - படத்தை வெளியிட இடைக்கால தடை
x
வேல்மதி இயக்கத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள 'அண்டாவ காணோம்' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில், பட தயாரிப்புக்காக அவுட்டோர் யூனிட் உபகரணங்களை சப்ளை செய்ததற்காகவும், தயாரிப்பாளர்களுக்கு கடனாக வழங்கிய 25 லட்சம் ரூபாயையும் திருப்பி தராமல் படத்தை வெளியிடகூடாது என உத்தரவிடக் கோரி,அவட்டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும் சங்கையா  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன்,  படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் எட்டாம் தேதிக்கு   ஒத்தி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்