இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவு நாள்
பதிவு : ஆகஸ்ட் 14, 2020, 06:25 PM
மறைந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். பட்டாம் பூச்சி விற்பவன் எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்று, இளம் வயதிலேயே இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக அறியப்பட்டார்.சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்துடன், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.முத்துக்குமாரின் கவிதை இயற்றும் திறனைப் பார்த்து வியந்த அவரது நண்பரும், இயக்குனருமான சீமான்
தனது "வீரநடை'திரைப் படத்தின் மூலம் நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். காதல் கொண்டேன்' படத்துக்காக இவர் எழுதிய தேவதையை கண்டேன்.. உள்ளிட்ட பல பாடல்கள், முத்துக்குமாரின் திறமையைப் பறைசாற்றியது. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்தார். எளிய நடையில் உணர்வுகளைக் குழைத்து எழுதிய காதல் பாடல்கள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.

தொடர்ந்து சுட்டும் விழி சுடரே... உருகுதே உருகுதே... பூக்கள் பூக்கும் தருணம்.. என் காதல் சொல்ல நேரம் இல்லை... உள்ளிட்ட ஏராளமான பாடல்களின் மூலம் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம்வந்தார்,  நா. முத்துக்குமார். நா. முத்துக்குமார் பாடல்களில் வரிகளை ஒருபோதும் இசை ஆதிக்கம் செலுத்தாது. அந்தளவிற்கு அவரது வரிகள் கணமானவை. ஆண்டுதோறும் 100 க்கும் அதிகமான பாடல்களை எழுதி, தமிழ் திரையுலகில் அதிக பாடல்களை எழுதியவர் என்ற சாதனையையும் படைத்தார். தந்தையின் அன்பையும், தியாகத்தையும் எடுத்துரைத்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடலுக்கு கண் கலங்காதவர் யாருமில்லை.

தங்க மீன்கள் படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய, ஆனந்த யாழை மீட்டுகிறாய்... பாடல் தந்தை - மகளுக்கிடையிலான பாசப்பிணைப்பினைப் போற்றியது. இப்பாடலும், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு பாடலும் இவருக்கு 2 தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்தது. 1990 களின் இறுதியில் திரைத்துறையில் பாடலாசிரியராகப் பயணத்தை தொடங்கிய நா. முத்துக்குமார், மொத்தம் ஆயிரத்து 500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். 2 தேசிய விருதுகளுடன் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதையும் ஐந்துமுறை பெற்றிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20 க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார்.

"கிராமம் நகரம் மாநகரம்', "ஆணா ஆவண்ணா", "என்னை சந்திக்க கனவில் வராதே', "குழந்தைகள் நிறைந்த வீடு', "அணிலாடும் முன்றில்' ஆகிய இவரது நூல்கள் பெரிதும் கவனம் பெற்றவை. தன் உணர்ச்சிப்பூர்வமான அழகான பாடல்களால் திரையுலகையும், அதன் கோடிக்கணக்கான ரசிகர்களையும் திக்குமுக்காடச் செய்த நா. முத்துக்குமார், 2016 ஆம் ஆண்டு தனது 41 வது வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவது திடீர் மறைவு திரையுலகையும், இலக்கிய உலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் ஒரு கறுப்பு ஆடு. அது ஒவ்வொருமுறையும் தனக்குப் பிரியமான ரோஜாவை இளம்வயதிலேயே தின்று தீர்த்து விடுகிறது.


தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

388 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

314 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

67 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

17 views

பிற செய்திகள்

போதைப்பொருள் வழக்கு - 4 நடிகைகளுக்கு சம்மன்

போதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

94 views

போதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - அதிர்ச்சியில் தெலுங்கு பட திரையுலகம்

போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

401 views

"தியேட்டர்கள் திறந்த பிறகே மாஸ்டர் ரிலீசாகும்" - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரத்யேக பேட்டி

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகாது என்று, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

28 views

சக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

நடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது புகார் - கொலை மிரட்டல் விடுத்ததாக பூனம் பாண்டே குற்றச்சாட்டு

நடிகை பூனம் பாண்டேவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் காதல் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.

239 views

விஸ்வரூபம் எடுத்து நிற்கும் போதைப் பொருள் விவகாரம் - தீபிகா படுகோன் மேலாளருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து திரை பிரபலங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரும் இதில் சிக்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.