சொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்
பதிவு : ஆகஸ்ட் 08, 2020, 08:12 PM
மாற்றம் : ஆகஸ்ட் 08, 2020, 08:58 PM
தான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா உதவிகள் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா விருது தொடர்பான விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை கோயில் குறித்து பேசினார். பிரகதீஸ்வரர் கோயில் குறித்த அனுபவங்களை பேசிய அவர், அருகே உள்ள மருத்துவமனையின் நிலை குறித்து தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார். கோயிலுக்கு செலவு செய்வது போல, மருத்துவமனைக்கும், பள்ளிகளுக்கும் செலவிடுங்கள் என ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது... 

ஜோதிகாவின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் ஜோதிகாவை விமர்சனம் செய்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்துக்களின் மனதை ஜோதிகா புண்படுத்திவிட்டார் என கண்டன குரல்களும் ஓங்கி ஒலித்தன. ஆனால் ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அன்பை விதைப்போம் என்றும் திடமாக நின்றார் கணவர் சூர்யா. அதேநேரம் ஜோதிகாவுக்கு விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும், சமூகவலைதளங்களில் ஜோதிகாவுக்கு எதிரான விமர்சனங்களும், ஆதரவு கருத்துக்களும் தொடர்கின்றன. 

இந்நிலையில், தான் கூறியதை வெறும் சொல்லாக மட்டுமின்றி அதை செயலாக மாற்றியிருக்கிறார் நடிகை ஜோதிகா. தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை நம்பி பல மாவட்ட மக்கள் உள்ள நிலையில், அந்த மருத்துவமனைக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் ஜோதிகா. குழந்தைகள் மருத்துவமனையாக உள்ள இந்த ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததை அறிந்த ஜோதிகா, அங்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க 25 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். 

அகரம் அறக்கட்டளை வாயிலாக இதற்கான நிதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இயக்குநர் இரா. சரவணன் வழங்கினார். அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விளையாடுவதற்கான திடல், குழந்தைகள் உள்ள பிரிவில் வண்ண வண்ண ஓவியங்கள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்து மருத்துவமனையின் சூழலையே கண்ணுக்கு இனிமையாக மாற்றியிருக்கிறார் நடிகை ஜோதிகா. இது முதல் கட்ட உதவிதான் என்றும், இனி வரும் நாட்களிலும் ஜோதிகா பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவார் என்றும் அவர் தரப்பில் கூறப்படுகிறது. 

ஜோதிகாவின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பேச்சோடு நிறுத்திக் கொள்வோர் மத்தியில் தான் சொன்னதை செயலாக மாற்றி நிஜத்திலும் பொன் மகளாக ஜொலிக்கிறார் நடிகை ஜோதிகா....

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

280 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

152 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

நேதாஜி வாழ்க்கை இன்றும் உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.

10 views

சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் செய்த மாற்றம் - நடிகன் மட்டுமல்ல...இனி அசுரன்

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் மாற்றம் ஒன்றை செய்துள்ளார். 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

28 views

சிம்புவுக்கு உணவூட்டி விடும் தாய் - சிறுவனுடன் விளையாடியபடி சாப்பிடும் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு, அவரது தாய் உஷா ராஜேந்தர் உணவூட்டி விடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

943 views

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திருப்பம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

2230 views

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

305 views

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

304 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.