இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகி உள்ளது.
x
இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உள்ள தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை, திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதனால் தற்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ள பாரதிராஜா, உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறது என்றும், புதிய நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய சங்கத்தின் பிறப்பு அவசியமாகிறது என்றும் தயாரிப்பாளர்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்