இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் - புதிய சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி தீவிரம்
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 04:17 PM
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. இந்த நிலையில், இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட செயல்திறன் தயாரிப்பாளர்கள் என்கிற பெயரில் புதிய சங்கம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சங்கத்தின் கவுரவ தலைவர்களாக எஸ்.ஏ.சந்திரசேகர், கே.ஜி.முரளிதரன் ஆகியோரும், செயலாளராக டி.சிவா, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்காக மூன்று சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பாரதிராஜா தலைமையில் மேலும் ஒரு சங்கம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கம் மூலம் தமிழ் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தை ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

285 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

264 views

பிற செய்திகள்

சொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

தான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா உதவிகள் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது

506 views

சுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.

11 views

கொரோனாவில் இருந்து மீண்ட அபிஷேக் பச்சன் - டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிஷேக் பச்சன் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளார்.

31 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

251 views

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்

கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

14 views

முதல் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.