கேஜிஎஃப் -2 படத்தின் போஸ்டர் - மிரட்டலான தோற்றத்தில் சஞ்சய் தத்

கேஜிஎஃப் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.
கேஜிஎஃப் -2 படத்தின் போஸ்டர் - மிரட்டலான தோற்றத்தில் சஞ்சய் தத்
x
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரம் - மும்பை வந்த பீகார் போலீசார் விசாரணை

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மரணம் தொடர்பாக, மும்பையில் வந்த பீகார் போலீசார், அவரது சகோதரி மிட்டு சிங் உள்ளிட்ட 2 பேரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை புகாரின் பேரில், நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 


"லாபம்" - படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம் குரல் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, தயாரிக்க, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில், நடிகர் விஜய் சேதுபதியும் தம்மை இணைத்து கொண்டுள்ளார்.



கேஜிஎஃப் -2 படத்தின் போஸ்டர் - மிரட்டலான தோற்றத்தில் சஞ்சய் தத்

கேஜிஎஃப் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. தற்போது இந்த படத்தின் முதற்பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான தோற்றத்தில் சஞ்சய் தத் இருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.



"தில் பேச்சாரா" - நடிகர் சுஷாந்த் சிங் படம் வசூல் சாதனை
OTT தளத்தில் ஒரே நாளில், 95 மில்லியன் பார்வையாளர்கள்...
ரூ.2000 கோடி வசூல் செய்து சாதனை
 
நடிகர் சுஷாந்த் சிங்கின், இறுதிப்படமான தில் பேச்சாரா, OTT தளத்தில் வெளியானது.  
இப்படம் வெளி வந்த 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் OTT தளத்தில் பார்த்துள்ளனர். இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



பிரபல நடிகர் சோனு சூட், 47 வது பிறந்த நாள் இன்று...
சமூக வலைத்தளத்தில் குவியும் வாழ்த்துக்கள்...

பிரபல நடிகர் சோனு சூட், இன்று 47 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கொரோனா ஊரடங்கின் போது பல்வேறு தரப்பினருக்கு உதவிகளை செய்த, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 


மருத்துவர்கள், செவிலியர்கள் நம் உயிர் காக்கும் தேவதைகள் -  நடிகர் அமிதாப் பச்சன் கருத்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் தமது டிவிட்டர் பதிவில், கொரோனா நோயை எதிர்த்து போராடும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களின் பணியை, பாராட்டியுள்ளார். வெள்ளை உடையில் காணப்படும் தேவதைகள் என்றும் இவர்களது பணியினால், நாம் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்