இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் - தந்தை புகாரின் அடிப்படையில் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு
பதிவு : ஜூலை 29, 2020, 01:21 PM
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் தொடர்பாக நடிகையும், அவரது காதலியுமான ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை  சம்பவம் தொடர்பாக நடிகையும், அவரது காதலியுமான ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சுஷாந்திடம்  நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கடந்த ஒரு வருடமாக, சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுஷாந்தின் வங்கி கடன் அட்டைகள், வங்கி கணக்குகளை, ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி, சுஷாந்த்தை விட்டு ரியா பிரிந்து சென்றதாகவும் அப்போது வீட்டில் இருந்த ரொக்கப்பணம், மற்றும் நகைகளை எடுத்து சென்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது, சுஷாந்தின் மருத்துவ அறிக்கைகளையும், பொது வெளியில் வெளியிட போவதாக ரியா மிரட்டியதாகவும், சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும் போலீசார் விடுத்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுஷாந்த் மரண வழக்கு தொடர்பாக ஆவணங்களை பெறுவதற்காக, பீகார் போலீசார் மும்பை விரைந்துள்ளனர். 

ரியா மீது, சுஷாந்த்தின் தந்தை அளித்துள்ள புகார் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்தின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஹேஷ்டாக்கும், டுவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, சிபிஐ விசாரணையை தவிர மாற்று வழியில்லை என கருத்து கூறியுள்ளார். சுஷாந்தின் மரண விவகாரம், இந்தி திரை உலகில் பெரும் புயலை கிளப்பி யிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1296 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

345 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

158 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

18 views

பிற செய்திகள்

இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்

மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

16 views

துக்ளக் தர்பார் - "அண்ணாத்த செய்தி" பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

624 views

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகி உள்ளது.

91 views

"ரகிட ரகிட" பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை

தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

450 views

சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

335 views

"இசைக்கருவிகள், இசை குறிப்புகள் திருட்டு" - பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா அளித்த புகார் குறித்து இன்று நேரில் விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

212 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.