இன்று - நடிகர் தனுஷ் பிறந்த நாள்...

இன்றைய தலைமுறை நடிகர்களில் நடிப்பு, இயக்கம், பாடல், தயாரிப்பு என்று பல்வேறு தளங்களில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கும், நடிகர் தனுஷ்-இன் பிறந்த நாள் இன்று.
இன்று - நடிகர் தனுஷ் பிறந்த நாள்...
x
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குனர் செல்வராகவனின் தம்பியுமான, தனுஷ்- இன் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு.  பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்த தனுஷ், கல்லூரி செல்வதற்கு முன்பே தன் தந்தை மற்றும் அண்ணனின் வற்புறுத்தலால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான "துள்ளுவதோ இளமை"திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' தனி கவனம் பெற்றது. அதன் பிறகு 'திருடா திருடி' படத்தில் நடித்த தனுஷ் மன்மத ராசா பாடலால் உச்சத்துக்குச் சென்றார். ஒல்லியான தேகம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற தோற்றம் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றிருந்த இலக்கணத்தை உடைத்தெறிந்தார். புதுப்பேட்டை திரைப்படம் தனுசுக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்தது. முழுக்க முழுக்க வணிகப் படங்கள், அதே நேரம் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் படங்கள் என இரண்டு வகைப் படங்களிலும் தனுஷ் தனி முத்திரை பதித்திருக்கிறார். பொல்லாதவன், யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் தன்னை வணிகப் படங்களின் நட்சத்திர நாயகனாக நிரூபித்துக் காட்டினார்.


யாரடி நீ மோகினி

அதேநேரம் ஆடுகளம், மயக்கம் என்ன, 3 , மரியான் என நடிப்புக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார்.


ஆடுகளம்

மரியான், மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் உளவியல் சிக்கல் கொண்ட பாத்திரங்களின் தன்மைகளை உள்வாங்கி வெளிப்படுத்திய விதம், 'ஆடுகளம்' படத்தில் காதல், நட்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய விதம் குறிப்பிடத் தக்கவை.



Next Story

மேலும் செய்திகள்