ஆந்திராவில் மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயி - டிராக்டர் அனுப்பி உதவி செய்த நடிகர் சோனு சூட்
பதிவு : ஜூலை 27, 2020, 01:54 PM
ஆந்திர மாநிலத்தில், மாடுகளுக்கு பதில் தனது மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயிக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கிக் கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் என்கிற ஊரில் வசித்து வருகிறார் நாகேஸ்வர் ராவ்.திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்த அவருக்கு, ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பருவகாலம் தொடங்கியுள்ளதால், சொந்த ஊரில் விவசாய வேலைகளை தொடங்குவதற்கு டிராக்டரை வாடகைக்கு அமர்த்த வழியில்லாத வறுமை வாட்டியுள்ளது. உழவு மாடுகளையும் பயன்படுத்த வழியில்லை. இதையடுத்து, விவசாயி நாகேஸ்வர் ராவ், தனது இரண்டு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அதை தனது டிவிட்ட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்,  ஏர் உழுவதற்கு டிராக்டர் வழங்கப்படும் என்றும், அந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

223 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

215 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

60 views

பிற செய்திகள்

முதல் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.

46 views

இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாயும், படுகாயமடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு 90 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது.

499 views

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக ஹன்சிகா

ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் அத்ரங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

38 views

சிகப்பு ரோஜாக்கள் 2 - கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா கதாநாயகி?

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் கதாநாயகியாக, கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது.

2845 views

"சினிமா படபிடிப்பு : தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சினிமா படபிடிப்புக்கு,அனுமதி வழங்க தற்போது வாய்ப்பு இல்லை என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

60 views

இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்

மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.